இங்கிலாந்து மேட்ச்சும் ரூல்ட் அவுட்.. உலக கோப்பையில் திரும்பி வருவாரா.?.. ஹர்திக் பாண்டியா பற்றி பிசிசிஐ முக்கிய தகவல்.!

0
7044

தற்போது இந்தியாவில் 13 வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தொடரில் 23 ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணியை ஐந்து வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணி மூன்றாவது இடத்திலும் இருக்கின்றது .

5 போட்டிகளில் விளையாடி இருக்கும் இந்தியா, ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி 10 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிற்கு அரை இறுதி வாய்ப்பு உறுதியாகிவிட்டது என்றே கூறலாம். இந்நிலையில் இந்தியா நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து எதிர்த்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் வைத்து விளையாட இருக்கிறது.

- Advertisement -

அடுத்தடுத்து உலக கோப்பை போட்டிகளில் விளையாடி வந்த இந்தியாவிற்கு இது ஒரு சிறந்த ஓய்வாக இருந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாக இருப்பதாக பிசிசிஐ தரப்பிலிருந்து கருத்து தெரிவித்துள்ளதாக 18 தொலைக்காட்சி செய்தி வெளியிட்டு இருக்கிறது.

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நினைவில் நடைபெற்ற போட்டியில் பந்துவீச்சின் போது காயமடைந்தார் ஹர்திக் பாண்டியா. அந்தப் போட்டியில் பந்துவீசி ஹர்திக் பாண்டியா பந்தை தடுக்க முற்பட்டபோது அவரது குதிகாலில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்தப் போட்டியில் இருந்து வெளியேறிய அவருக்கு கேன் செய்து பரிசோதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. மேலும் இந்திய அணியுடன் அவர் பயணம் செய்யவும் இல்லை.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பார் என்ற ஒரு கருத்து நிலவி வந்தது. தற்போது அந்த போட்டியிலும் கார்த்திக் பாண்டியா விளையாட மாட்டார் என பிசிசிஐக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேசியிருக்கும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ட்ரவுண்ட் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்து அணிக்காக எதிரான போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இது குறித்து பேசி இருக்கும் அவர் இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் எடுக்கப்பட்டு இருக்கிறது எனவும் ஹர்திக் பாண்டியா முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்திய அணி தற்போது ஐந்து வெற்றிகள் பெற்று வலுவான நிலையில் இருப்பதால் வருகின்ற போட்டியிலும் ஹர்திக் பாண்டியாவை உடனடியாக களம் இறக்கி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்திருக்கிறார். ஐந்து வெற்றிகள் உடன் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் ஹர்திக் பாண்டியாவிற்கு மேலும் நல்ல ஓய்வு வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருட உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியாவிற்கு பேட்டிங் வாய்ப்புகள் சரியாக அமையாவிட்டாலும் நான்கு போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலகக்கோப்பை தொடரில் பந்துவீச்சில் இந்தியாவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய வீரர்களில் ஒருவராக ஹர்திக் பாண்டியாவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்கு இன்னும் நாலு போட்டிகள் மீது இருக்கும் நிலையில் வருகின்ற 29ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக லக்னோவில் விளையாட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நவம்பர் இரண்டாம் தேதி நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்காவை கொல்கத்தாவில் வைத்து எதிர்கொள்ள உள்ளது. அதைத் தொடர்ந்து ஐந்தாம் தேதி இலங்கை அணிக்கு எதிராக மும்பையிலும் பனிரெண்டாம் தேதி நெதர்லாந்து அணிக்கு எதிராக பெங்களூரிலும் விளையாட இருக்கிறது.