3வது டெஸ்ட்.. அதிரடியாக பிளேயிங் லெவனை வெளியிட்டது இங்கிலாந்து.. செம ட்விஸ்ட்

0
356
England

நேற்று இங்கிலாந்து அணியின் தரப்பில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அந்த அணியின் துணை கேப்டன் ஒல்லி போப் வந்திருந்தார். அவர் பத்திரிகையாளர்கள் கேட்ட பல கேள்விக்கு தன்னுடைய பதிலை கூறியிருந்தார்.

அதே சமயத்தில் டீம் காம்பினேஷன் எப்படி அமையும் யார் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார்கள் என்பது குறித்து கேட்கப்பட்டதற்கு, சில விஷயங்கள் ரகசியமானவை அவற்றை தன்னால் கூற முடியாது என்று தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அதே சமயத்தில் இங்கிலாந்து அணி இந்த இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் போட்டிக்கு முதல் நாளிலே தங்களுடைய பிளேயிங் லெவனை வெளியிட்டு அதிரடி காட்டி வருகிறது.

நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் இங்கிலாந்து துணை கேப்டன் ஒல்லி போப் சில விஷயங்கள் ரகசியமானவை கூற முடியாது என்று கூறி இருந்த காரணத்தினால், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பிளேயிங் லெவனை முன்கூட்டியே இங்கிலாந்து அறிவிக்குமா? அறிவிக்காதா? என்கின்ற சந்தேகம் இருந்தது.

இந்த நிலையில் இன்று இங்கிலாந்து அணி வழக்கம்போல் அதிரடியாக தங்களுடைய பிளேயிங் லெவனை வெளியிட்டு இருக்கிறது. போட்டி நடக்கும் ராஜ்கோட் மைதானத்தின் ஆடுகளத்திற்கு பொருத்தமான அணியை தேர்வு செய்திருக்கிறது.

- Advertisement -

இந்த ஆடுகளம் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாக இருந்து வந்திருக்கிறது. ஆனாலும் ஆடுகளத்தில் கொஞ்சம் புல் இருப்பதாக நேற்று கூறப்பட்டது. எனவே அதற்கேற்றபடியான அணியை இங்கிலாந்து தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணியில் இருந்து ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக இடம் பெற்ற ஆப் ஸ்பின்னர் சோயப் பஷீர் நீக்கப்பட்டு, அவருடைய இடத்தில் அதிவேக பந்துவீச்சாளர் மார்க் வுட் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆப் ஸ்பின் பவுலர் இடத்துக்கு ஜோ ரூட்டை வைத்து இங்கிலாந்து சரி செய்து கொள்ளும்.

இதையும் படிங்க : “ஜோ ரூட்டுக்கு பும்ரா பிரச்சனை கிடையாது.. இந்த நம்பரை பாருங்க இதுதான் பிரச்சனை” – மைக்கேல் வாகன் கருத்து

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன்:

பென் ஸ்டோக்ஸ் (கே)
சாக் கிராலி
பென் டக்கெட்
ஒல்லி போப்
ஜோ ரூட்
ஜானி பேர்ஸ்டோவ்
பென் ஃபோக்ஸ்
ரெஹான் அகமது
டாம் ஹார்ட்லி
மார்க் வுட்
ஜேம்ஸ் ஆண்டர்சன்