“ஜோ ரூட்டுக்கு பும்ரா பிரச்சனை கிடையாது.. இந்த நம்பரை பாருங்க இதுதான் பிரச்சனை” – மைக்கேல் வாகன் கருத்து

0
317
Root

ஒட்டுமொத்த இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை எடுத்துக் கொண்டால், தற்போது இங்கிலாந்து அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் ஜோ ரூட்தான் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என எல்லோராலும் கணிக்கப்படுகிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டை பாரம்பரியமான வழியில் அணுகி விளையாடுவதற்கு தேவையான எல்லா பேட்டிங் தொழில்நுட்பங்களும் அவரிடம் இருக்கிறது. அவரது விக்கெட்டை பெறுவது என்பது பந்துவீச்சாளர்களுக்கு அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது.

- Advertisement -

சிறப்பான பந்துவீச்சாளர் இடமிருந்து சிறப்பான பந்துகள் விழுந்தால் மட்டுமே அவரது விக்கெட்டை கைப்பற்ற முடியும். இதன் காரணமாகத்தான் அவர் பும்ராவிடம் மட்டுமே எட்டு முறை ஆட்டம் இழந்திருக்கிறார். ஆனால் இதில் பாதி பாஸ்பால் முறையில் விளையாடியதால் கிடைத்த விக்கெட்.

ஜோ ரூட் பேட்டிங் திறமையை பாஸ்பால் கிரிக்கெட் முறை அழித்து விட்டதாக மைக்கேல் வாகன் குறிப்பிட்டிருந்தார். அதே சமயத்தில் பாஸ் பால் முறையில் அவருடைய பேட்டிங் ஆவரேஜ் அதிகமாகி இருக்கிறது. இதன் காரணமாக மைக்கேல் கருத்துக்கான ஆதரவு பெருகவில்லை.

தற்பொழுது மைக்கேல் வாகன் புதிய புள்ளிவிபரம் ஒன்றைக் கொண்டு வந்து, டெஸ்ட் கிரிக்கெட்டை ஜோ ரூட் பாரம்பரிய வழியில் ஏன் விளையாட வேண்டும்? பாஸ்பால் முறை அவருக்கு ஏன் சரியானது கிடையாது? என்பதை விளக்கமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறும்பொழுது ” இந்தியாவின் பும்ரா எட்டு முறை ஜோ ரூட் விக்கெட்டை பெற்றிருக்கிறார். ஜோ ரூட்டுக்கு மிக அதிகமாக பந்து வீசும் வேகப்பந்து வீச்சாளராக பும்ரா இருந்திருக்கிறார். அதே சமயத்தில் ஜோ ரூட் சுழல் பந்துவீச்சிலும் மிக தடுமாற்றமான ஆட்டத்தையே சமீப காலத்தில் கொண்டிருக்கிறார் என்பதை மறக்கக்கூடாது.

அதாவது மீண்டும் ஜோ ரூட் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக பழைய முறையில் விளையாட வேண்டும். நாள் முழுவதும் விளையாடி பெரிய சதங்களை அடித்து நிற்பதற்கு, பேட்டிங்கில் நான்காவது இடத்தில் ஒரு உறுதியான வீரர் பாறை போல் தேவை.

இதையும் படிங்க : “இந்திய அணியில் இருந்து ஓரங்கட்ட.. என்னை பத்தி தப்பா யாரோ பரப்பறாங்க” – தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி குற்றச்சாட்டு

ஜோ ரூட் முன்பு சுழல் பந்துவீச்சில் 80.5 ரன் சராசரி வைத்திருந்தார். இது தற்பொழுது 34.5ஆக குறைந்திருக்கிறது. முன்பு சுழல் பந்துவீச்சில் 132 பந்துகளுக்கு ஒரு முறை ஆட்டம் இழந்தார். தற்பொழுது 42 பந்துகளுக்கு ஒரு முறை ஆட்டம் இழக்கிறார். பல சூப்பர் கார்களுக்கு மத்தியில் ஒரு கிளாசிக் கார் இருப்பது போல ஜோ ரூட் பழைய முறைக்கு மாற வேண்டும்” என கூறி இருக்கிறார்.