ஓய்வு முடிவை அறிவித்த இங்கிலாந்து வீரர் பிராட்.. சர்வதேச கிரிக்கெட்டில் படைத்த சாதனை விவரம்

0
332

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் தனது 37 வது வயதில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார். தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் தமக்கு கடைசி ஆட்டம் என்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவில் இரவு எட்டு முப்பது மணிக்கு தான் இந்த முடிவை நான் எடுத்தேன். நான் தற்போது சிறப்பாக வந்து வீசி வருகின்றேன். என்னுடைய உடலும் ஒத்துழைக்கிறது. எனினும் என்னுடைய கேரியர் உச்சத்தில் இருக்கும்போது ஓய்வு பெற வேண்டும் என நினைத்தேன்.

- Advertisement -

அதற்கு பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடரை விட வேறு எந்த சிறப்பான தருணமும் கிடையாது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்போதுமே நான் சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றேன். இதனால் தான் ஆசஸ் தொடர்தான் என்னுடைய கடைசி போட்டியாக இருக்க வேண்டும் என முடிவு எடுத்தேன்.

இந்த முடிவை நேற்று இரவு கேப்டன் ஸ்டோக்ஸ் இடமும், இன்று அணி வீரர்களிடமும் கூறினேன். ஞாயிற்றுக்கிழமையோ அல்லது திங்கட்கிழமையோ தான் என்னுடைய கடைசி சர்வதேச கிரிக்கெட் ஆகும். எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என பிராட் கூறியுள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் பட்டியலில் ஆண்டர்சனுக்கு பிறகு பிராட் இருக்கிறார். சுமார் 17 ஆண்டு காலமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளராக பிராட் விளங்கி இருக்கிறார்.

- Advertisement -

2006 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 போட்டியில் பிராட் அறிமுகமானார்.2007 ஆம் ஆண்டு இவருடைய பந்துவீச்சில் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் தொடர்ந்து 6 சிக்சர் அடித்தார்.அதன் பிறகு பிராட்  கரியரில் பல முன்னேற்றத்தை கண்டார். 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பை வென்ற போது அந்த அணியில் பிராட் முக்கிய வீரராக இருந்தார்.

இங்கிலாந்து சார்பாக 56 டி20 போட்டிகளில் விளையாடி 65 விக்கெட் களையும், 121 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 178 விக்கெட்டுகளையும் பிராட் வீழ்த்தி இருக்கிறார். எனினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் பிராட் பல்வேறு உச்சத்தை தொட்டு இருக்கிறார்.

இதுவரை 602 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்துள்ள பிராட் மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 845 விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில்  ஒரு இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய பிராட், ஆஸ்திரேலிய அணியை 60 ரன்களில் சுருட்டினார். ஆசஸ் தொடர் வரலாற்றில் இங்கிலாந்து அணி சார்பாக அதிக விக்கெட்  எடுத்த வீரர் என்ற பெருமையும் பிராடுக்கு இருக்கிறது.