இங்கிலாந்து புதிய டெஸ்ட் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லமுக்கு 4 வருடத்திற்கும் சேர்த்து இவ்வளவு சம்பளமா ? இங்கிலாந்து நிர்வாகம் அறிவிப்பு

0
2305
Brendon McCullum England Test Coach

பிரபல நியூசிலாந்து அதிரடி வீரரும், முன்னாள் கேப்டனும், தற்போது ஐ.பி.எல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குப் பயிற்சியாளராக இருக்கும் பிரன்டன் மெக்கல்லமை, இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கான பயிற்சியாறாராக ஒப்பந்தம் செய்திருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பையைக் கைப்பற்றுவதற்காக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பேட்டிற்கு சாதகமான மைதானங்களை அமைத்து, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அதிரடியாய் ஆடும் வீரர்களை ஊக்குவித்து ஆதரித்தது. இதன் விளைவாக அந்த உலகக்கோப்பையையும் இங்கிலாந்து கைப்பற்றியது.

- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்தச் செயல் திட்டம் உலகக்கோப்பையைப் பெற்று தந்திருந்தாலும், இன்னொரு புறம் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்துவிட்டது. இங்கிலாந்து கவுன்டி அணிகள் நல்ல தரமான டெஸ்ட் வீரர்களைக் கண்டறிய தவறிவிட்டன. இதனால் டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து உள்நாட்டிலும் தொடர்களை இழக்க ஆரம்பித்தது இங்கிலாந்து அணி.

சற்றுத் தாமதமாகச் சுதாரித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டை முன்னேற்றும் விதமாக நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது. இதன் ஒருபகுதியாக இங்கிலாந்து கவுன்டி அணிகள் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளன. டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளங்கள் சிறப்பாகத் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனான பென் ஸ்டோக்ஸ், இளம் ஆல்ரவுண்டரான சாம் கரன் போன்றவர்கள், கவுன்டி டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக, ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கவில்லை.

இதன் இன்னொரு பகுதியாகத்தான் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு புதிய பயிற்சியாளராக பிரன்டன் மெக்கல்கமை கொண்டு வந்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இப்பொழுது அவரது சம்பள விபரம் தெரியவந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மெக்கல்லமிற்கு மொத்தம் 18.85 கோடி சம்பளமாகத் தரப்பட உள்ளது. அதாவது ஆண்டுக்கு 4.71 கோடி ரூபாய் சம்பளம் பெற உள்ளார் மெக்கல்லம்!

- Advertisement -