“சர்பராஸ் கானுக்கு பயமே கிடையாது.. ஸ்டோக்ஸ்க்கு அசரவே இல்ல” – இங்கிலாந்து கோச் பால் காலிங்வுட் பேச்சு

0
675
Sarfaraz

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட்டில் நாம் தொடர்ச்சியாக எந்த வீரர்களை பார்க்கப் போகிறோமோ, அந்த வீரர்களை கொண்டு வந்து இந்திய அணியின் நிரந்தர வீரர்களாக மாற்றுவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்திய அணியில் தற்போது அனுபவம் மிகுந்த பேட்ஸ்மேன்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவர் மட்டுமே இருக்கிறார்கள். இதில் விராட் கோலிக்கு முன்பாக சீக்கிரத்தில் ரோஹித் சர்மா நகர்ந்து கொள்ளக்கூடிய நிலையில் இருக்கிறார். இதற்கு அடுத்து விராட் கோலி கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் இடத்திற்கும் வந்துவிடலாம்.

- Advertisement -

உதாரணமாக 2013 ஆம் ஆண்டில் இருந்து மட்டும் பத்துக்கும் மேற்பட்ட வீரர்களுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மிடில் வரிசை பேட்ஸ்மேன் சர்பராஸ் கான் மற்றும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் துருவ் ஜுரல் ஆகியோருக்கு இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் முதல் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இன்றைய போட்டியில் முதல் மூன்று விக்கெட்டுகளை இந்திய அணி பத்து ஓவருக்கு முன்பாக இழந்த பிறகு, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் 204 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டார்கள்.

ரோகித் சர்மா 131 ரன்கள் ஆட்டம் இழந்து வெளியேறியதும் அறிமுக வீரர் சர்பராஸ் கான் விளையாட உள்ளே வந்தார். ஆனால் அவருடைய ஆட்டம் அறிமுக வீரருக்கான எந்த பதட்டமும் இல்லாமல், யாரும் யோசிக்க முடியாத அளவுக்கு தைரியமாக இருந்தது.

- Advertisement -

இன்றைய நாள் ஆட்டம் முடிவதற்குள் மேற்கொண்டு இரண்டு விக்கெட்டுகளையாவது கைப்பற்ற, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அட்டாக்கிங் பீல்டிங் செட்டப்பை வைத்து நெருக்கடி கொடுக்க பார்த்தார்.

ஆனால் இளம் அறிமுக வீரர் சர்பராஸ் தான் இதற்கெல்லாம் பயப்படவே கிடையாது. பீல்டர்கள் உள்ளே இருக்க அவர் பந்தை தைரியமாகக் காற்றில் தூக்கி நேராக அடித்தார். மேலும் ரிஸ்க் எடுத்து ஸ்வீப் ஷார்ட் களை அழகாக விளையாடினான். அதிரடியாக 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

இதையும் படிங்க : வீடியோ.. சர்பராஸ் கானை ரன் அவுட் ஆகிய ஜடேஜா.. கடுப்பான ரோகித் சர்மா செய்த செயல்

இவர் ஆட்டம் குறித்து இங்கிலாந்து கோச் பால் காலிங் வுட் கூறும் பொழுது “சர்பராஸ் கான் விளையாடியது மாதிரி அறிமுகப் போட்டியில் விளையாடுவதற்கு, மிகப்பெரிய தைரியம் தேவை. பென் ஸ்டோக்ஸ் அவரை கட்டுப்படுத்த தொடர்ந்து அட்டாக்கிங் பீல்டிங்கை வைத்துக் கொண்டே இருந்தார். ஆனால் சப்ராஸ்கான் பந்தை காற்றில் அடிப்பதற்கு பயப்படவே கிடையாது” எனக் கூறியிருக்கிறார்.