இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் சமீபத்தில் நிறைவு பெற்றது. டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்கிற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதை ஜோ ரூட் மற்றும் டேரில் மிட்செல் பகிர்ந்து கொண்டனர்.
பென் ஸ்டோக்ஸ் இந்திய அணிக்கு திட்டம் வைத்திருக்கிறார்
ஒரு அணியாக கடந்த வாரங்களில் நாங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நியூசிலாந்து அணிக்கு அடுத்தபடியாக இந்திய அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறோம். நியூசிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியது போல் நிச்சயமாக இந்திய அணிக்கு தனித் திட்டம் வைத்திருப்பார் என்று நம்புகிறேன். இந்திய அணிக்கு எதிராக மட்டுமன்றி இனி வர இருக்கும் டெஸ்ட் தொடர்களுக்கும் அவரிடம் திட்டம் இருக்கும் என்றும் ஜோ ரூட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எங்களுடைய மனநிலை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்
உலகின் சிறந்த அணிக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்று வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டி மிக அற்புதமாக இருந்தது என்றும் குறிப்பாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்த நிலையில் இருந்தோம்.
அதன்பின்னர் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாக விளையாடி மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றோம் அது எங்களுக்கு எங்களுடைய திறமையை நிரூபிக்க நல்ல மேடையாக இருந்தது. எங்களது பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் எங்களுடைய சப்போர்ட் ஸ்டாஃப் அனைவருக்கும் நன்றி. முப்பத்தி ஆறு வயதிலும் ஸ்டூவர்ட் பிராட் மிக அற்புதமாக நிறைய ஓவர்களை வீசி வருகிறார். மேட்டி பாட்ஸ் மிக அற்புதமாக பந்து வீசுகிறார், அதேபோல ஜாக் லீச் தன்னுடைய அபாரமான ஸ்பின் பந்து வீச்சால் எங்களை ஆச்சரியப்படுத்துகிறார்.
மேலும் பேசிய அவர் இந்திய அணி முற்றிலும் மாறுபட்ட அணி அந்த அணியை எதிர்கொள்வது கடினம் இருப்பினும் நியூசிலாந்து அணிக்கெதிராக எங்களுடைய மனநிலை எப்படி இருந்ததோ அதே மனநிலையுடன் தான் இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கிறோம். வெற்றிபெறும் அளவுக்கு எங்களது ஆட்டம் இருக்கும் என்றும் பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.