“நான்தான் அடுத்த ஷேன் வார்னே.. விராட் கோலியை அவுட் செய்வேன் ” – இங்கிலாந்து ரேகான் அகமத் பேச்சு

0
111
Ahmed

இங்கிலாந்து அணி இந்த முறை இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு அனுபவம் இல்லாத மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை கூட்டி வந்திருக்கிறது.

இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலேயே இந்த மூன்று சுழற் பந்துவீச்சாளர்களும் ஒரே அணியில் இடம் பெற்று விளையாடி விட்டார்கள். மேலும் எதிர்பார்ப்புக்கு மாறாக சிறப்பாகவே செயல்பட்டும் இருக்கிறார்கள்.

- Advertisement -

இதில் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட ரேகான் அகமத் மற்றும் சோயப் பஷீர் என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இதில் ரேகான் அகமத்துக்கு 19 வயதுதான் ஆகிறது.

மேலும் இவர் பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி, முதல் போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பேட்டியின் போது ” நான் ஒவ்வொரு ஓவர்களிலும் ஒரு ஆப்-ட்ராக்கர்களை வீசுகிறேன். நான் என்னை ஷேன் வார்னே போல உணர்கிறேன்.அவர் பந்து வீசுவது போலவே வீசுவதாக நினைக்கிறேன். எனக்கு ட்ரெஸ்ஸிங் ரூமில் கிடைக்கும் ஆதரவும் நம்பிக்கையும்தான் இதையெல்லாம் செய்ய வைக்கிறது.

- Advertisement -

எங்கள் கேப்டன் ஸ்டோக்ஸ் எங்கள் சுழற்பந்து வீச்சு கூட்டணி உடன் பேசும் விதம், அவர் எங்களை நடத்தும் விதம், ஒவ்வொரு பந்திலும் ஒவ்வொரு விக்கெட்டை தேட வைக்கும் அளவுக்கு இருந்து வருகிறது.

விராட் கோலி அவர்கள் வந்தால் நன்றாக இருக்கும். இதுஇன்னும் ஒரு சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் நம்ப முடியாத வகையில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். அவர் செய்திருக்கும் சாதனைகளே அவருக்காக பேசும். விராட் கோலியை அவுட் செய்வது மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று. அதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நான் நிச்சயம் செய்வேன்.

இதையும் படிங்க : “பும்ராகிட்ட நான் விளையாடும்போது பார்த்து பயந்தது இந்த விஷயம்தான்” – ஏபி டிவில்லியர்ஸ் பேச்சு

ஜெய்ஸ்வால் ஒரு சிறந்த வீரர். அவர் விளையாடும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். அடுத்து அவர் பெரிய ரன்கள் எடுக்கக் கூடாது என நினைக்கிறேன். ஆனால் அவர் சிறப்பாக விளையாடுவதை நாம் மதிக்க வேண்டும். கில்லும் அப்படிப்பட்டவர்தான்” எனக்கூறி இருக்கிறார்.