பட்லர் முதல் வீரராக சாதனை.. ஆர்ச்சர் கம்பேக்.. டி20ல் பாகிஸ்தானை இங்கிலாந்து சுலபமாக வென்றது

0
1912
England

பாகிஸ்தான் அணி தற்பொழுது இங்கிலாந்து நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறது. இன்று நடந்த இரண்டாவது போட்டியில் ஜோஸ் பட்லர் அதிரடியில் இங்கிலாந்து வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த தொடரின் முதல் போட்டி மழையின் காரணமாக நடைபெறவில்லை. இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்து வீசுவது என முடிவு செய்தார். இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் திரும்ப வந்தார்.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 9 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார். மூன்றாவது இடத்தில் வந்த வில் ஜேக்ஸ் 23 பந்துகளுக்கு 37 ரன்கள் எடுத்தார். நான்காவது இடத்தில் வந்த ஜானி பேர்ஸ்டோ 18 பந்தில் 21 ரன்கள் எடுத்தார்.

ஒரு முனையில் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிய கேப்டன் ஜோஸ் பட்லர் 51 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 84 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி 3, இமாத் வாசிம் மற்றும் ஹாரிஸ் ரவுப் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் ரன் ஏதும் இல்லாமல் ஆட்டம் இழந்தார். இன்னொரு இளம் துவக்க ஆட்டக்காரர் சையும் அயூப் 7 பந்தில் 2 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து பாபர் அசாம் 26 பந்துகளில் 32, பகார் ஜமான் 21 பந்தில் 45, இமாத் வாசிம் 13 பந்தில் 22, இப்திகார் அஹமத் 17 பந்தில் 23 ரன்கள் எடுத்தார்கள். 19.2 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 160 ரன்கள் ஆல் அவுட் ஆகி 23 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கிலாந்து தரப்பில் ரீஸ் டாப்லி 3 விக்கெட் கைப்பற்றினார். அதிவேக ஆர்ச்சர் 4 ஓவரில் 28 ரன்னுக்கு 2 விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : கோலிக்கு எதிராக சாம்சனுக்கு ஆதரவாக.. மீண்டும் களத்தில் குதித்த அம்பதி ராயுடு.. தொடரும் சர்ச்சைகள்

இந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் 84 ரன்கள் குவித்ததின் மூலமாக, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மூன்றாயிரம் ரண்களை எட்டிய முதல் இங்கிலாந்து வீரர் என்கின்ற சாதனையை படைத்தார். இரண்டாவது இடத்தில் இயான் மோர்கன் 2458 ரன்கள் எடுத்து இருக்கிறார்.

- Advertisement -