கோலிக்கு எதிராக சாம்சனுக்கு ஆதரவாக.. மீண்டும் களத்தில் குதித்த அம்பதி ராயுடு.. தொடரும் சர்ச்சைகள்

0
225
Ambati

நடப்பு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான அணி மிகவும் சிறப்பாக முதல் பாதியில் விளையாடி, இரண்டாம் பாதியில் சறுக்கியது. இதனால் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து, இரண்டாவது தகுதிச்சுற்றில் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோற்று வெளியேறியது. இந்த நிலையில் அம்பதி ராயுடு சஞ்சு சாம்சனை பாராட்டி பேசி இருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் 8 ஆட்டங்களில் ஏழு ஆட்டங்களை வென்றது. ஏறக்குறைய பாதி ஐபிஎல் சீசன் இடையே அவர்கள் முதல் இரண்டு இடங்களை பிடிப்பது உறுதியான ஒன்றாக இருந்தது. அந்த அணி தேவையான அளவுக்கு எல்லா இடங்களிலும் பலமாக இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் மேற்கொண்டு அடுத்த ஆறு போட்டிகளில் ஒரு போட்டியை வென்று ஒரு போட்டி டிரா, ஆக நான்கு போட்டிகளை தொடர்ந்து தோற்றது. இதனால் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிக்க முடிந்ததால் எலிமினேட்டர் சுற்றில் விளையாட வேண்டிய இடத்துக்கு தள்ளப்பட்டது. இறுதியாக ஹைதராபாத் அணி இடம் தோற்று வெளியேறியும் விட்டது.

தற்போது சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பதி ராயுடு ஆர்சிபி அணி மீதான கடுமையான விமர்சனத்தில் இருந்து வருகிறார். சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆர்சிபி வெற்றி பெற்ற பொழுது, ஆர்சிபி அணியினர் செய்த சில விஷயங்கள், மைதானத்திற்கு வெளியே ஆர் சி பி ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகர்களிடம் நடந்து கொண்ட முறை சிஎஸ்கே தரப்பை கடுமையாக கோபம் அடைய வைத்திருக்கிறது. இதற்கான எதிர்வினையை மறைமுகமாக ஆர்சிபி அணி மற்றும் விராட் கோலி மீது செய்து வருகிறார்.

தற்போது அவர் சஞ்சு சாம்சன் குறித்து பேசும்பொழுது “வருத்தப்பட வேண்டாம் சஞ்சு சாம்சன். நீங்கள் ஒரு நாள் சிறந்த கேப்டனாக மாறுவீர்கள். இந்த ஐபிஎல் தொடரில் உங்கள் அணி விளையாடிய விதம் குறித்து நீங்கள் பெருமைப்பட வேண்டும். நீங்கள் முன்னணியில் இருந்து அணியை வழிநடத்தினீர்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : 2024 ஐபிஎல் கப் இவர்களுக்குதான்.. இந்த ரெண்டு பேர் பைனல்ல மாஸ் பண்ணுவாங்க – மேத்யூ ஹைடன் கணிப்பு

இப்படியான ஒன்றைத்தான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். கேப்டனாக உங்கள் சிறந்ததை கொடுத்தீர்கள். ப்ளேஆப் போட்டிகள் எப்பொழுதும் கடினமானவை. முடிவடையாத இந்த விளையாட்டில் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் திரும்பி வரலாம். அடுத்து நடக்க இருக்கும் டி20 உலக கோப்பையில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள்” என்று பாராட்டி இருக்கிறார்.