ஜானி பேர்ஸ்டோவ் 99* ரன்கள், ஹாரி புரூக், ஸ்டோக்ஸ் அரைசதம்… வலுவான முன்னிலை.. ஆஸ்திரேலியாவை கதிகலங்கவிட்டு இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

0
375

முதல் இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்து அணி 275 ரன்கள் முன்னிலை பெற்றது. 3ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் அடித்து, 162 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 317 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வோக்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

அதன்பின் பேட்டிங் செய்த செய்த இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் ஜாக் கிராலி 189 ரன்கள் குவித்து அவுட்டானார். மொயின் அலி 54 ரன்கள், ஜோ ரூட் 84 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர்.

களத்தில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹாரி புரூக் இருவரும் அவுட்டாகாமல் இருக்க, இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 384 ரன்கள் அடித்திருந்தனர்.

ஹாரி புரூக் 61 ரன்கள் மற்றும் பென் ஸ்டோக்ஸ் 51 ரன்கள் அடித்து, மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது அவுட் ஆகினர். அடுத்து வந்தவர்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தாலும், ஒரு முனையில் நின்று கொண்டு அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் 99 ரன்கள் அடித்து இறுதிவரை களத்தில் இருந்தார். இவர் 10 பவுண்டர்கள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் அடித்தார்.

- Advertisement -

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 592 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியை விட 275 ரன்கள் முன்னிலை பெற்றது.

அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க ஜோடி உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் இருவரும் சிறிது நேரம் போராடினர் ஆனால் கவாஜா வெறும் 18 ரன்களுக்கு மார்க் வுட் பந்தில் வெளியேறினார்.

பார்மில் இல்லாத டேவிட் வார்னர் மீண்டும் ஒருமுறை சொதப்பலான துவக்கம் கொடுத்து, 28 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். இந்த போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கிரிஸ் வோக்ஸ் பந்தில் வெளியேறினார். ஸ்மித் வெறும் 17 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். தவறான ஷார்ட் விளையாடி அவரும் ஆட்டம் இழந்தார். டிராவிஸ் ஹெட் 1 ரன் மட்டுமே அடித்து அவுட் ஆனார்.

மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் அடித்திருந்தது. களத்தில் மிட்ச்சல் மார்ஷ்(1) மற்றும் மார்னஸ் லபுஜானே(44) இருவரும் இருக்கின்றனர். ஆஸ்திரேலியா இன்னும் 162 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.

இங்கிலாந்து பவுலர்கள் அதீத நம்பிக்கையுடன் பந்துவீசி வருவதை பார்க்கையில் இப்போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை பெறுவதற்கு முனைப்புடன் இருப்பது தெரிகிறது.