ENG vs NZ.. கேப்டனான சிஎஸ்கே வீரர்.. 17 ஓவரில் ஆட்டத்தை முடித்த நியூசி.. கோப்பை வாய்ப்பை தட்டிப்பறித்த நியூசிலாந்து.!

0
2226

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து நான்கு போட்டிகளைக் கொண்ட டி20 தொடரிலும், ஒரு நாள் போட்டி தொடர்களிலும் விளையாட இருக்கிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் இறுதிப்போட்டி டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இங்கிலாந்து அணி முதல் இரண்டு டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடரானது 2-1 என்ற நிலையில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்று இருந்தது. மேலும் நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற முனைப்புடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது.

- Advertisement -

மறுபுறம் இந்த போட்டியை எப்படியாவது வெற்றி பெற்று தொடரை சமன் செய்யலாம் என்ற முனைப்பில் நியூசிலாந்து அணி இருந்தது. நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக மொயின் அலி நியமிக்கப்பட்டிருந்தார். இவர் சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மொயின் அலி பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணிக்காக சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்து ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக ஆடி விரைவாக ரன்கள் குவித்தாலும் மற்ற வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

ஒரு கட்டத்தில் 11ஓவர்களில் 105 ரன்களுக்கு இரண்டு விக்கெட்களை மட்டுமே இழந்திருந்த இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்திவீச்சினால் 20 ஓவர்களில் 175 ரன்கள் 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஒரு கட்டத்தில் 200 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணி 175 ரன்கள் நியூசிலாந்து அணியால் கட்டுப்படுத்தப்பட்டது. அந்த அணியின் வீரர் ஜானி பேர்ஸ்டோ 41 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் டேவிட் மலான் மற்றும் லியாம் லிவிங்ஸ்டண் ஆகியோர் தல 26 ரன்கள் எடுத்திருந்தனர்

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் மிட்ச்சல் சாண்ட்னர் நான்கு ஓவர்களில் 30 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் நியூசிலாந்து அணியின் இஸ் ஷோதி இரண்டு விக்கெட்டுகளையும் மேட் ஹென்றி மற்றும் ரவீந்திர தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர்களான பின் ஆலன் மற்றும் டிம் செய்பெர்ட் ஆகியோர் மிகச் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

- Advertisement -

அதிரடியாக தனது இன்னிங்ஸை தொடங்கிய பின் ஆலன் பதினாறு ரணகளிலும் டெரில் மிச்சல் 14 ரன்களிலும் ஆட்டம் இழந்தாலும் டிம்  செய்பெர்ட் மற்றும் பிலிப்ஸ் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி அதிரடியாக ரண்களை குவித்தனர். சிறப்பாக விளையாடி 32 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்த டிம்  செய்பெர்ட் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து கிளன் பிலிப்ஸ் 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இறுதியில் மார்க் சாப்மேன் 25 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உடன் 40 ரன்கள் மற்றும் சான்ட்னர் ஒன்பது பந்துகளில் 2 போன்றடிகளுடன் 17 ரன்களும் எடுக்க நியூசிலாந்து அணி 17.2 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 179 ரன்கள் குவித்து ஆரம்பிக்கட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்தப் போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட மிச்சல் சான்ட்னர் ஆட்டநாயகனாகவும் இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி இன்னும் ஒரு சில தினங்களில் துவங்க இருக்கிறது.