ENG vs NZ.. 14 ஓவர்களில் தர்ம அடி.. நியூசிலாந்தை அனாயசமாக வீழ்த்தியது இங்கிலாந்து.. பரபரப்பாகும் சர்வதேச கிரிக்கெட்!

0
3680
England

நியூசிலாந்து அணி இங்கிலாந்து நாட்டுக்கு மூன்று நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது!

நியூசிலாந்து அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் அறிமுகமானார்.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் பின் ஆலன் முதல் ஓவரில் மூன்று சிக்ஸர்கள் விளாசி அதிரடியாக ஆரம்பித்தார். ஆனால் நியூசிலாந்து அணிக்கு முடிவு ஆரம்பம் போல் சிறப்பாக அமையவில்லை.

அந்த அணியின் பின் ஆலன் 21, டெவோன் கான்வே 3, டிம் செப்பர்ட் 9, மார்க் சேப்மேன் 11, டேரில் மிட்சல் 7, மிட்சல் சான்ட்னர் 8, ஆடம் மில்னே 10, இஷ் சோதி 16, டிம் சவுதி 7, லாக்கி பெர்குஷன் 2 என சொற்ப ரன்களே எடுத்தார்கள்.

இன்னொரு முனையில் தாக்குப்பிடித்து விளையாடிய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கிளன் பிலிப்ஸ் 38 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 139 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் லுக் வுட் மற்றும் அறிமுகவீரர் பிரைடன் கார்ஸ் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து துரத்துவதற்கு வசதியான இலக்கை நோக்கி இங்கிலாந்து களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜானி பேர்ஸ்டோ 4, வில் ஜாக்ஸ் 22 ரன்களில் ஆட்டம் இழந்தார்கள்.

இதற்கு அடுத்து டேவிட் மலான் மற்றும் இளம் வீரர் ஹாரி புரூக் இருவரும் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அதிரடியாக அமைத்தார்கள். வெற்றி உறுதியான நிலையில் டேவிட் மலான் 42 பந்துகளில் ஐந்து பவுண்டரி இரண்டு சிக்சர் உடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இறுதியில் 14 ஓவர்களில் இலக்கை எட்டி அனாயசமாக இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை களத்தில் நின்ற ஹாரி புரூக் 27 பந்துகளில் இரண்டு பவுண்டரி 3 சிக்ஸர்கள் உடன் 43 ரன்கள் எடுத்தார். லிவிங்ஸ்டன் 4 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். நியூசிலாந்து தரப்பில் சவுதி, பெர்குஷன், சோதி மூவரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.