சிஎஸ்கேவுக்கு புதுசா போனஸ் மாதிரி ஒருத்தர் கிடைச்சிருக்காரு.. 2024 எங்களுக்குதான் – பிராவோ பேட்டி

0
896
Bravo

ஐபிஎல் தொடரில் தங்கள் அடையாளங்களை விட்டுக் கொடுக்காமல் எப்போதும் தொடர்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரண்டு அணிகளும் மிகவும் முக்கியமானவை. மும்பை இந்தியன்ஸ் அணியின் அடையாள வீரரான கீரன் பொல்லார்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றதும், உடனடியாக அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பாகவே லஸீத் மலிங்காவுக்கு இப்படியான பொறுப்புகள் கொடுக்கப்பட்டன.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாள வீரர்களில் ஒருவரான டிவைன் பிராவோ ஓய்வு பெற்றதும், உடனடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக கொண்டுவரப்பட்டிருக்கிறார். ஏற்கனவே இவருடைய பொறுப்பில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த எல் பாலாஜி தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு ஆண்டு விடுப்பில் சென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மும்பை இந்தியன் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்த டிவைன் பிராவோ சென்னை அணி ஐபிஎல் பட்டங்களை கைப்பற்றியதில் மிகப் பெரும்பான்மையான பங்கை வகித்திருக்கிறார். பந்துவீச்சு பேட்டிங் மற்றும் பில்டிங் என அவருடைய பங்களிப்பு, களத்தில் அவருடைய துடிப்பான செயல்பாடுகள், வீரர்களையும் ரசிகர்களையும் மிகவும் உற்சாகமாக வைத்திருந்தது.

தற்போது ஓய்வு பெற்று விட்ட பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிய பொறுப்பில் தொடர்கின்ற அவரிடம், அணி உரிமையாளர்கள் குறித்தும், அணியின் இளம் வீரர்கள் குறித்தும் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. பிராவோ அதற்கு பதில் அளித்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து பிராவோ கூறும்பொழுது “எங்கள் அணி உரிமையாளர்களிடமிருந்து எப்பொழுதும் அணிக்குள் எந்தவிதமான தலையீடும் அழுத்தமும் வந்தது கிடையாது. மேலும் அவர்கள் வீரர்களை அவர்களுடைய இயல்பிலேயே இருக்க விடுகிறார்கள். இதுதான் எங்கள் அணி உரிமையாளர் அணுகுமுறையின் அழகே!

- Advertisement -

தற்போது எங்களிடம் மிகச் சிறந்த அணி இருக்கிறது. கடந்த சீசனில் நாங்கள் எங்கு நிறுத்தி இருந்தோமோ அங்கு இருந்து தொடர விரும்புகிறோம். மேலும் சீசனில் மிக இளம் பந்து வீச்சு படையை வைத்து நாங்கள் சிறப்பான விஷயங்களை செய்திருந்தோம்.

இந்த ஆண்டு எங்களுக்கு சர்துல் தாக்கூர் மீண்டும் கிடைத்திருக்கிறார். இது எங்களுக்கு பெரிய போனஸ். மேலும் முஸ்தஃபிசூர் வந்திருக்கிறார். அவர் நல்ல அனுபவமும் தரமும் வாய்ந்தவர். பதிரணாவை பேபி மலிங்கா என்று அழைக்கிறோம். கடந்த சீசனின் சிறப்பாக விளையாடிய துஷார் தேஷ்பாண்டே இவர்களுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியானது.

இதையும் படிங்க : தோனி கிடையாது.. இவருக்காகவே கிரிக்கெட் பார்த்தேன்.. இவரால்தான் கிரிக்கெட்டராகவே ஆனேன் – ரிஷப் பண்ட் பேட்டி

இந்திய கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் ஜெய்ஸ்வால் அற்புதமான திறமை கொண்ட ஒருவராக இருக்கிறார். அவர் எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டிய வீரர். இதேபோல் திலக் வர்மாவும் மற்றொரு அருமையான திறமை இருக்கக் கூடிய வீரர். இதேபோல் ருத்ராஜ் எனக்கு மிகவும் பிடித்த வீரர்களில் ஒருவர்” என்று கூறியிருக்கிறார்.