கேஎல் ராகுல் வெளியிட்ட வீடியோ.. இஷான் கிஷனை தேடி வந்த ஆப்பு.. பறிபோகும் உலகக்கோப்பை வாய்ப்பு

0
2151

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல். டெஸ்ட் அணிக்கு துணை கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல், மோசமான பேட்டிங் ஃபார்மால் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது வரை திறமைக்கேற்ப சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்கள் பட்டியலில் கேஎல் ராகுலுக்கே முதலிடம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு கேஎல் ராகுல் மோசமான விளையாடி வருகிறார்.

இதனிடையே ஐபிஎல் தொடரின் போது கேஎல் ராகுலுக்கு ஏற்பட்ட காயம் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து என்சிஏவில் பயிற்சியை தொடங்கிய கேஎல் ராகுல், ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க தீவிரமாக தயாராகி வருகிறார். ஏற்கனவே பேட்டிங் பயிற்சியை தொடங்கியுள்ள கேஎல் ராகுல், தற்போது விக்கெட் கீப்பிங் பயிற்சியையும் தொடங்கிவிட்டார்.

- Advertisement -

இதனால் நிச்சயம் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடரில் இஷான் கிஷனின் வாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.

ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் அரைசதம் விளாசிய இஷான் கிஷன், ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவே விளையாடினார். ஆனால் பேக் அப் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்ட சஞ்சு சாம்சன், மிடில் ஆர்டரில் களமிறங்கி அதிரடி அரைசதத்தை விளாசி அசத்தியுள்ளார்.

இந்திய ஒருநாள் அணிக்கு கேஎல் ராகுல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதோடு, விக்கெட் கீப்பராகவும் இருக்கிறார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடும் பட்சத்தில், அவருக்கே ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏற்கனவே மிடில் ஆர்டரில் விளையாடி வந்த ஸ்ரேயாஸ் காயத்தில் இருந்து குணமடைந்து இந்திய அணிக்கு திரும்புவதால், அவரும் கேஎல் ராகுலும் முதன்மை வீரர்களாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் சூர்யகுமார் யாதவிற்கே இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இதனால் பேக் அப் விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் இருவரில் ஒருவர் மட்டுமே உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

அந்த ரேஸில் பேக் அப் ஓப்பனராக ஏற்கனவே கேஎல் ராகுல் இருப்பதால், இஷான் கிஷன் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரிசர்வ் வீரராக மட்டுமே இருப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியும் இப்படி ஒரு நிலைமையா என்ற ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.