2 ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்கு திரும்பும் தென்ஆப்பிரிக்க வீரர் – விராட் கோஹ்லி & கோவுக்கு காத்திருக்கும் அடுத்த சவால்

0
463
Duanne Olivier and Virat Kohli

இந்திய அணி தற்போது நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்து உள்ளது. இதன் பின்னர் வரும் இருபத்தி ஆறாம் தேதி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்க காத்திருக்கிறது. 17ஆம் தேதியே ஆரம்பிக்க வேண்டிய இந்த தொடர் கொரோனா தொற்று காரணமாக ஒரு வார காலம் தள்ளி போய் உள்ளது. டி20 போட்டிகள் எதுவும் இல்லாமல் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடராக இது நடத்தப்படுகிறது. முதல் டெஸ்ட் செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கு 21 பேர் கொண்ட அணியை தென் ஆப்பிரிக்க நிர்வாகம் வெளியிட்டுள்ளது. டீன் எல்கர் தலைமையிலான இந்த அணியில், டுவேன் ஆலிவர் இடம்பெற்றுள்ளார். கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்காக இவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்காக 10 போட்டிகளில் 48 விக்கெட்டுகளைக் கொடுத்தவர் இவர். அதன் பிறகு இங்கிலாந்து நாட்டில் கவுண்டி கிரிக்கெட் விளையாட சென்று தற்போது மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். இவரைப்போலவே கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய மார்க்கோ ஜென்சனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ரிக்கெல்டன், ஸ்டர்மன், எர்வீ, மகளா போன்ற பல புதுமுக வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த நெதர்லாந்து தொடருக்கு ஓய்வு அழிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க அணியின் முக்கிய வீரர்களான டிகாக், நோர்கியா, ரபாடா போன்றோரும் அணிக்கு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்று குணமாகி லுங்கி நிகிடியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் டெஸ்ட் தொடர் தென் ஆப்பிரிக்க அணிக்கு இதுவாகும். அதனால் வெற்றியுடன் இதை துவக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்கா கடுமையாக முயற்சித்து வருகிறது.

21 பேர் கொண்ட தென் ஆப்ரிக்கா அணி – எல்கர், பவுமா, டிகாக், ரபாடா, எர்வீ, ஹெண்ட்ரிக்ஸ், லிண்டே, மஹராஜ், நிகிடி, மார்க்ரம், முல்டர், நோர்கியா, பீட்டர்சன், வாண்டர் டுசன், வெரினி, ஜென்சன், ஸ்டர்மன், சுப்ரேயன், மகளா, ரிக்கெல்டன், ஆலிவர்.