தென் ஆப்பிரிக்காவில் பெரிய மாற்றம் செய்யும் டிராவிட்.. இந்திய டெஸ்ட் டீம் வேற லெவல் சேஞ்ச்!

0
1117
Dravid

ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு, புதிய ஒரு சவாலை சந்திப்பதற்காக இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் இருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, நாளை மறுநாள் இந்திய அணிக்கு துவங்குகிறது. ரோகித் சர்மா கேப்டனாக இருந்து வழி நடத்துகிறார்.

- Advertisement -

மேலும் இந்த டெஸ்ட் அணியில் இருந்து விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் மனநலம் சார்ந்த விஷயத்திற்காக வெளியேறி இருக்கிறார். எனவே விக்கெட் கீப்பராக கே எஸ் பரத் வந்திருக்கிறார். அதே சமயத்தில் இன்னொரு விக்கெட் கீப்பராக கே எல் ராகுல் இருக்கிறார்.

பொதுவாக வெள்ளைப் பந்து வடிவத்தில் விக்கெட் கீப்பிங் செய்வது கொஞ்சம் எளிதானது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் என்பது மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். மேலும் கடுமையாக உழைக்க வேண்டும். நழுவவிடும் ஒரு கேட்ச் வாய்ப்பு கூட ஒரு நாள் முழுவதும் சோதித்து விடக்கூடிய ஆபத்து இருக்கிறது.

இந்த நிலையில்தான் டிராவிட் மிகப்பெரிய மாற்றம் ஒன்றுக்கு முயற்சி செய்கிறார். கே எல் ராகுலை டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக அறிமுகப்படுத்த பார்க்கிறார். கேஎல் ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டு விட்டால், இந்திய பேட்டிங் யூனிட் என்பது மிக வலிமையாக மாறிவிடும். மேலும் ரிஷப் பண்ட் வந்த பிறகு, இரண்டாவது விக்கெட் கீப்பராக கேஎல்.ராகுல் மட்டுமே இருப்பார். இன்னொரு விக்கெட் கீப்பர் தேவையில்லை என்பதால், பேட்டிங் மற்றும் பவுலிங் என புதிய வீரர்கள் வருவார்கள்.

- Advertisement -

இது குறித்து ராகுல் டிராவிட் கூறும் பொழுது ” இது கேஎல்.ராகுலுக்கு ஒரு உற்சாகமான சவால். ஏதாவது வித்தியாசமாக செய்ய ஒரு வாய்ப்பு. இஷான் கிஷான் கிடைக்காத பொழுது, எங்களிடம் இரண்டு விக்கெட் கீப்பர்கள் தற்பொழுது இருக்கிறார்கள். கே எல் ராகுல் நிச்சயமாக அதில் ஒருவர். அவர் இது குறித்து எங்களிடம் பேசியிருக்கிறார். அவர் இதை செய்வதிலும் ஆர்வமாக இருக்கிறார்.

அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுபோன்று அடிக்கடி செய்தவர் இல்லை என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் 50 ஓவர் கிரிக்கெட்டில் முழுமையாக விக்கெட் கீப்பிங் செய்து நன்றாக பேட்டிங்கும் செய்திருக்கிறார். இதற்கு நல்ல பயிற்சியும் தயாரித்தலும் வேண்டும். அவருக்கு இப்பொழுது கடந்த ஐந்தாறு மாதங்களில் அது கிடைத்திருக்கிறது.

மேலும் தென் ஆப்பிரிக்காவில் பெரிய அளவில் சுழல் எடுபடாது என்பதால், அவருக்கு விக்கெட் கீப்பிங் செய்வது அவருடைய வழியில் இங்கு கொஞ்சம் சுலபமாகவே இருக்கும். தற்பொழுது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இருந்ததை அப்படியே சிவப்புப்பந்துக்கு மாற்றுவதுதான் மட்டும்தான் முக்கியமானது!” என்று கூறியிருக்கிறார்!