ராகுல் டிராவிட்டுக்கு திடீர் ஓய்வு.. மேலும் 2 பேரை வீட்டுக்கு அனுப்பும் பிசிசிஐ.. பயிற்சியாளர் ஆகிறார் இன்னொரு லெஜெண்ட்!

0
1997

வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிவுற்றவுடன் ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு கொடுக்கப்பட உள்ளதாகவும், அவருடன் சேர்ந்து மேலும் இரண்டு பேருக்கு ஓய்வளிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வந்திருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றிருக்கும் இந்திய அணி முதற்கட்டமாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

டெஸ்ட் தொடர் முடிவுற்றவுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரும் நடக்கிறது. இதை முடித்த பிறகு அயர்லாந்து செல்லும் இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 18, 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகள் நடக்கிறது.

அயர்லாந்து தொடரின் போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மற்றும் பௌலிங் பயிற்சியாளர் பரஸ் மாம்பரே ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட உள்ளதாக பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல்கள் வந்திருக்கிறது.

அயர்லாந்து அணியுடனான டி20 தொடர் முடிவுற்றவுடன், ஆசிய கோப்பை தொடர், ஆஸ்திரேலியா அணியுடன் ஒருநாள் தொடர் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை என இடைவிடாமல் தொடர்ந்து போட்டிகள் நடைபெற இருப்பதால் அதற்கு முன்பே அழுத்தத்தை குறைப்பதற்காக இந்த ஓய்வு அவர்களுக்கு கொடுக்கப்பட உள்ளது.

- Advertisement -

வழக்கமான பயிற்சியாளர்கள் இல்லாததால், அயர்லாந்து தொடருக்கு செல்லும் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லட்சுமணன் ஏற்கிறார். அவருடன் சேர்ந்து அங்கே பணியாற்றி வரும் மற்றும் சிலர் பேட்டிங் மற்றும் பௌலிங் பயிற்சியாளர் பொறுப்புகளையும் ஏற்க உள்ளனர்.

அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அநேகமாக வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஒருநாள் தொடர் முடிவுற்றவுடன் இந்த போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று பிசிசி தேர்வுக்குழு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.