இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக சுப்மன் கில் பார்க்கப்படுகிறார். ஆனால் அவருக்கு தற்போது ஒருநாள் கிரிக்கெட் வடிவம் மட்டுமே வசதியான ஒன்றாக இருக்கிறது.
தொடர்ச்சியாக டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் அவர் தடுமாறி வருகிறார். இதன் காரணமாக தற்போது அவர் இரண்டு வடிவ இந்திய அணியில் இருந்தும் வெளியேற்றப்படக்கூடிய விளிம்புக்கு வந்து விட்டார்.
ஒரு அணியின் எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்படுகிற ஒரு வீரர், அந்த அணிக்காக இரண்டு வடிவ கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்றால், அது மிகப்பெரிய முரணான ஒன்றாக இருக்கும். தற்போது கில் அப்படிப்பட்ட முரணில்தான் இருக்கிறார்.
இந்திய அணிக்காக கடைசியாக 15 இன்னிங்ஸ்களில் அவரிடம் இருந்து பெரிதான பங்களிப்புகள் சீராக கிடைக்கவில்லை. இன்றைய போட்டியிலும் 66 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஹார்ட்லி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அவர் பந்தை தடுக்க செய்கிறார், ஆனால் சிங்கிள் ரொட்டேட் செய்ய முடியவில்லை. இது அவருக்கு பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது.
இந்திய அணிக்கு வெளியே இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடவும் நிறைய வீரர்கள் வரிசை கட்டிக் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் விராட் கோலி மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் வந்தாலே இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகமாகிவிட்டது.
கில் டெஸ்ட் பேட்டிங் பிரச்சினை குறித்து பேசி உள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர் பீட்டர்சன் ” நான் இப்போது சொல்வதை இந்த ஒளிபரப்பை டிராவிட் பார்ப்பாரா? என்று எனக்குத் தெரியாது. டிரெஸ்ஸிங் ரூமில் என்னுடைய பேட்டிங்கை மாற்றி அமைத்தவர் அவர்தான். எனக்கு அவர் என்ன செய்தாரோ அதையே கில்லுக்கும் அவர் செய்ய வேண்டும்.
ஆப்சைடில் பந்தை அடிப்பது, வலைப்பயிற்சியில் லைன் மற்றும் லென்த்தை சீக்கிரம் கணித்து விளையாடுவது, சிங்கிள் ரொட்டேஷன் எப்படி செய்ய வேண்டும்? இதையெல்லாம் டிராவிட் அவருக்கு சொல்லித் தர வேண்டும். அவரைச் சிறந்த வீரராக உருவாக்கும் வேலைகளை செய்ய வேண்டும்.
இதையும் படிங்க : “பேர்ஸ்டோ ஒரு பிளான் வச்சிருந்தார்.. அத நான் இப்படித்தான் உடைச்சேன்” – அக்சர் படேல் சூப்பர் தகவல்
கில் ஒரு தரமான வீரர். ஆனால் அவர் இப்படி ஆட்டம் இழப்பது குறித்து எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால் அதற்கான திறமைகள் அவரிடம் இல்லை. இதில்தான் நான் நிறைய ஏமாற்றம் அடைகிறேன். ராகுல் டிராவிட் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது எப்படி என அவரை தயார் செய்தால், அவர் தன் சிறகுகளின் கீழ் அவரை அழைத்துச் சென்றால், உலகம் கில்லுடையதாக மாறும்” என்று கூறியிருக்கிறார்.