“பேர்ஸ்டோ ஒரு பிளான் வச்சிருந்தார்.. அத நான் இப்படித்தான் உடைச்சேன்” – அக்சர் படேல் சூப்பர் தகவல்

0
118
Axar

நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றிருந்தார்கள்.

நேற்று இவர்களில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். அக்சர் படேல் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

இந்த இரண்டு விக்கெட்டுகளில் ஜானி பேர்ஸ்டோ விக்கெட் மிகவும் முக்கியமானது. அக்சர் படேல் வீசிய பந்து பெரிய அளவில் திரும்பி அவரை கிளீன் போல்ட் ஆக்கியது.

கடந்த முறை இங்கிலாந்து இங்கு டெஸ்ட் தொடர் விளையாட வந்த பொழுது அக்சர் படேல் பந்துவீச்சில் பேர்ஸ்டோ மிகவும் மலிவான முறையில் விக்கெட்டை கொடுத்திருந்தார். விளையாடத் தெரியாத ஒரு இளம் பேட்ஸ்மேன் போல இருந்தார்.

ஆனால் இந்த முறை உள்ளே வந்ததிலிருந்து அவர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். கடந்த முறை பந்து எந்த பக்கம் திரும்புகிறது என்பதில் அவருக்கு இருந்த குழப்பம் இப்போது இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தான் சிறந்த பந்தை ஒன்றை வீசி அவரை ஆட்டம் இழக்க செய்தார் அக்சர் படேல்.

- Advertisement -

இந்த நிலையில் அவர் விக்கெட்டை கைப்பற்ற என்ன மாதிரியான திட்டத்தை வகுத்தேன் என்று அக்சர் படேல் கூறி இருக்கிறார். மேலும் பேர்ஸ்டோவும் ஒரு திட்டத்துடன் வந்திருப்பதை கூறினார்.

இதுகுறித்து அக்சர் படேல் கூறும்பொழுது “எல்பிடபிள்யூ ஆகக்கூடாது என்பதற்காக அவர் நான்காவது ஸ்டெம்பில் கார்டு எடுத்து நின்று கொண்டிருந்தார். இதன் காரணமாக நான் நேராக ஸ்டெம்பை நோக்கி வீச முடிவு செய்தேன்.

இதையும் படிங்க : ஸ்டோக்ஸ் கேப்டன்சி தவறை நேற்றே துல்லியமாக கணித்த கும்ப்ளே.. லெஜன்ட் லெஜன்ட்தான்

மேலும் நான் வீசிய முனையில் ஒரு பந்து திரும்பியது இன்னொரு பந்து திரும்பவில்லை. அந்த நேரத்தில் நான் வீசிய அந்தப் பந்து நன்றாக திரும்ப அது விக்கட்டை கைப்பற்றி விட்டது.

மேலும் இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான ஆடுகளம் என்று கிடையாது. இங்கு சரியான அடிப்படை முறையை பின்பற்றி விளையாடினால் பேட்டிங் செய்ய முடியும். இங்கு ஒரு சில பந்துகள் அதிகமாக திரும்புகிறது அது மட்டும்தான் கொஞ்சம் கடினமானது” என்று கூறியிருக்கிறார்