” உங்களுக்கு ஜெயிக்க விருப்பம் இல்லையா? எதுக்கு இங்க வந்திங்க?” – ஆஸ்திரேலிய அணியை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!

0
3153
Australia

தற்போது இந்தியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி வலிமையான முன்னிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் இன்று மூன்றாவது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும். உலகக் கோப்பை வென்ற வேகத்தில் அடுத்த ஒரு வாரத்தில் ஆஸ்திரேலியா இந்திய மண்ணில் ஒரு தொடரை இழக்கும்.

- Advertisement -

முதல் போட்டியில் மேக்ஸ்வெல் மற்றும் ஹெட் இருவரும் விளையாடவில்லை. முதல் போட்டியில் தோல்வி அடைந்ததும் இரண்டாவது போட்டிக்கு மேக்ஸ்வெல் வந்தார். இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்து இருக்கின்ற காரணத்தினால் ஹெட் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இந்தத் தொடர் குறித்து பேசி உள்ள இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா “ஆஸ்திரேலியா அணி தற்பொழுது வெற்றி பெற வேண்டும். ஆனால் பெரிய கேள்வி என்னவென்றால், அவர்கள் உண்மையில் வெற்றி பெற விரும்புகிறார்களா? அவர்கள் இங்கே வெற்றி பெறக் கூடியவர்களா? வேறு எதற்காக இங்கே வந்தீர்கள்? உலகக் கோப்பையை வென்ற பிறகு அவர்கள் சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டார்கள்.

நான் மேத்யூ ஷார்ட்க்கு ஒரு ஆலோசனை கொடுக்க விரும்புகிறேன். உங்களுக்கு எதிராக ரவி பிஷ்னோய் வந்து கூக்ளிதான் வீசுவார். இது எனக்கு மற்றும் இந்திய அணிக்கு, மைதானத்தில் இருக்கும் பார்வையாளர் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். எனவே கவனமாக விளையாடுங்கள்.

- Advertisement -

இந்தியாவுக்கு இந்த போட்டியில் என்ன இருக்கிறது? தொடரை வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. 3-0 என மாற்றுங்கள். திருவனந்தபுரம் போல இங்கும் டாஸ் முக்கியம் என்று நினைக்கிறேன். திருவனந்தபுரத்தில் இருந்ததை விட இங்கு அதிகமாக பனி வரும்.

ஜெய்ஸ்வால், ருத்ராஜ் மற்றும் இசான் கிஷான் மூவரும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஸ்ரேயாஸ் ஐயர் நான்காவது போட்டிக்கு வந்தால் யார் வெளியே செல்வார்கள். தற்பொழுது திலக் வர்மா இடம்தான் ஆபத்தில் உள்ளது. அப்பொழுது சூரியகுமார் ஐந்தாவது இடத்திற்கு செல்வாரா?” என்று கேள்வியுடன் முடித்திருக்கிறார்!