“உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா? இந்திய டீம்தான் கிடைச்சுதா? ” – முன்னாள் வீரர்கள் மீது ஹர்பஜன்சிங் நேரடித் தாக்கு!

0
193
Harbhajan

கடந்த வாரங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு 15 பேர் கொண்ட இந்திய அணியை ரோகித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு அறிவித்தது!

இங்கிருந்து இந்திய உலகக்கோப்பை அணி பற்றியான விமர்சனங்கள் இந்தியா தாண்டி கிளம்ப ஆரம்பித்தது. அது கேப்டன் ரோஹித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்திய கிரிக்கெட் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் என நீண்டு கொண்டே சென்றது.

- Advertisement -

இதேவேளையில் இந்திய அணி ஆசிய கோப்பைக்காகஇலங்கையில் முகாமிட்டது, இந்த நேரத்தில் கே.எல்.ராகுல் இந்திய அணியில் இணையவில்லை. அப்படியே உலகக்கோப்பை இந்திய அணி விமர்சனங்களை நிறுத்தி, இந்திய அணிக்கு நான்காவது ஐந்தாவது இடங்களில் யார் விளையாட வேண்டும் என்றுவிமர்சனம் மாறியது.

இது ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, இடது கை பேட்ஸ்மேன் மேல் வரிசையில் வேண்டும், எனவே இஷான் கிஷான் மேலே விளையாட வேண்டும், இதன் காரணமாக அனுபவ வீரர் விராட் கோலி நான்காம் இடத்திற்கு வந்தே ஆக வேண்டும் என்று இந்தப் பக்கம் அறிவுரைகள் ஆரம்பித்தது.

இப்படி இந்திய அணி குறித்து இங்கிலாந்து ஆஸ்திரேலியா பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முன்னாள் வீரர்கள் எக்கச்சக்கமான அறிவுரைகளையும் விமர்சனங்களையும் வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். இதை கண்டித்து நேற்று சுனில் கவாஸ்கர் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவருடன் இருந்த ஹர்பஜன் சிங்கும் அவரது கருத்தை ஏற்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன். இது நூறு சதவீதம் சரி. இவர்கள் எல்லோரும் தங்கள் நாட்டு அணிக்காக விளையாடி ஓய்வு பெற்று தற்போது வந்து இந்திய அணியை விமர்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். இது எப்படி நடக்கிறது? இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இது ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற நாடுகளில் இப்படி எல்லாம் அனுமதிப்பது கிடையாது. இவர்கள் அங்கு சென்று இப்படி அவர்களுக்கு ஒரு அணியை உருவாக்க முடியுமா? அது குறித்து விமர்சிக்க முடியுமா?

ஆனால் இந்த சோ கால்ட் லெஜெண்ட்ஸ் இந்தியாவைப் பற்றி கருத்து தெரிவிக்கிறார்கள். நம்பர் மூன்று மற்றும் நான்கில் யார் விளையாட வேண்டும்? என்று தீர்மானிக்கிறார்கள். யார் முதல் பந்துவீச்சாளர்? அல்லது கடைசி வரை யார் வீசுவார்கள்? என்பது வரை கூட இது போகிறது!” என்று தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்!