டோன்ட் வொர்ரி.. இந்திய பேட்ஸ்மேன்கள் பவுலர்கள் அழுத்தத்தில்தான் இருப்பார்கள்!” – ரோகித் சர்மா அணிக்கு டிரெண்ட் போல்ட் எச்சரிக்கை!

0
514
Boult

நாளை உலககோப்பை தொடரில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடக்க இருக்கும் போட்டி இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் நடக்கிறது.

நியூசிலாந்து அணியை இதுவரை 13 ஐசிசி தொடர்களில் சந்தித்து இந்தியா மூன்று முறை மட்டுமே வென்றிருக்கிறது. நியூசிலாந்து அணி இந்தியாவை 10 முறை வென்று இருக்கிறது. கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை அரையிறுதியில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்து இருக்கிறது.

- Advertisement -

மேலும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் தனது நான்கு போட்டிகளில் நான்கு வெற்றிகளைப் பெற்று இருந்தாலும் கூட, நியூசிலாந்து அணி ரன் ரேட் அடிப்படையில் முதல் இடத்தில் தொடர்கிறது.

இது மட்டும் இல்லாமல் நாளைய போட்டியில் வெல்லும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு என்பது ஏறக்குறைய உறுதி ஆகிவிடும் என்று கூறலாம். ஐந்தாவது வெற்றியை ஐந்தாவது ஆட்டத்தில் பெறும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு என்பது 99 சதவீதம் உறுதி.

இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் அபாயகரமான பந்துவீச்சாளரான டிரெண்ட் போல்ட் இந்திய அணிக்கு எதிரான போட்டி குறித்து தனது மனநிலையை பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டி குறித்து பேசி உள்ள அவர் கூறும் பொழுது “இந்தியா ஒரு சக்தி வாய்ந்த அணி. அவர்கள் எல்லா துறைகளிலும் வலிமையாக இருக்கிறார்கள். அவர்கள் சில நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். ஆனால் அவர்கள் நாங்கள் விளையாடி மகிழ்ந்த அணி.

இந்த போட்டிக்கு எங்கள் பார்வையில் எதுவும் மாறாது. நேர்மறையாக வெளியே சென்று, ஏற்கனவே சரியாக சென்று கொண்டிருக்கும் விஷயங்களை சரியாக செய்வது மட்டும்தான் எங்கள் வேலை. இந்திய அணியினர் இந்த நிலைமைகளை நன்கு உணர்ந்தவர்கள். ஆனால் அவர்களுக்கு மற்ற அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு இருக்கும் அழுத்தம் நிச்சயம் இருக்கும்.

இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதை விட பெரிய விஷயம் எதுவும் இருந்து விட முடியாது. போட்டியில் நிறைய தீவிரம் இருக்கும். களத்தில் நிறைய சூடான சம்பவங்கள் நடைபெறும்!” என்று கூறி இருக்கிறார்!