“சதம் இரட்டை சதம் அடிப்பாருனு இந்த இந்திய வீரரை நம்பாதிங்க!” – கம்பீர் அதிரடி பேச்சு!

0
518
Gambhir

அடுத்த இரண்டு வாரங்கள் இந்திய கிரிக்கெட் அணி விளையாடுவதற்கு மிகவும் கடினமான ஆடுகளங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டை தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக அந்த நாட்டில் விளையாட இருக்கிறது.

இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 26ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடக்க இருக்கிறது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி பல மாற்றங்களுக்கு உட்பட்டு வரும் காலக்கட்டம் என்பதால், தற்போதைய இந்திய டெஸ்ட் அணியிலும் என்ன மாதிரியான இடங்களில் எந்த வீரர்கள் வந்து விளையாடுவார்கள் என்பது குறித்தான கேள்விகள் இருக்கிறது.

இப்போதைக்கு உறுதியான விஷயமாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா துவக்க ஆட்டக்காரர்களாக வருவார்கள் என்பதும், விராட் கோலி வழக்கம் போல் நான்காவது வீரராக களம் இறங்குவார் என்பதும் வெளிப்படையாக இருக்கிறது. வேகம் மற்றும் பவுன்ஸ் கொண்ட தென் ஆப்பிரிக்கா ஆடுகளத்தில் ஜெய்ஸ்வால், கில், ஸ்ரேயாஸ் போன்ற இளம் வீரர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பது சுவாரசியமான கேள்வியாகவும் இருக்கிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் கூறும் பொழுது “தென் ஆப்பிரிக்காவில் வித்தியாசமான சூழல் மற்றும் வேகம் பவுன்ஸ் கொண்ட ஆடுகளங்கள் இருக்கின்றன. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் என்பது ஆசியாவில் உள்ள ஆடுகளங்கள் போலத்தான் இருக்கின்றன. இங்கே நீங்கள் யான்சன், ரபாடா, நிகிடி, பர்கர் போன்ற வேகத்தாக்குதல்களை சந்திக்க வேண்டும்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் பிரன்ட் புட் மற்றும் பேக் புட்டில் நன்றாகவே விளையாடுகிறார். ஆனாலும் கூட தென்னாபிரிக்காவில் வித்தியாசமான சவாலாக இருக்கும். இங்கு கிடைக்கும் அனுபவத்தின் மூலம் அவர் சிறப்பானவராக வருவார். ஒரு இளம் வீரர் வந்து இங்கு எடுத்ததும் சதம் இல்லை இரட்டை சதம் அடிப்பார் என்று நினைக்க வேண்டாம்.

ஒரு வேலை அவர் வந்து சதம் கூட எடுக்கட்டும். ஆனால் இங்கு ஜெய்ஸ்வால் கில் மற்றும் ஸ்ரேயாஸ் மூவரும் 25 முதல் 30 ரன்கள் எடுத்து ஒரு துவக்கம் கொடுத்தாலும் கூட, அவர்கள் இந்தியாவிற்கு திரும்பும் பொழுது நல்ல அனுபவத்துடன் போவார்கள்.

10, 15 ஆண்டுகளுக்கு முன்னாள் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் பொழுது வீரர்களை இவ்வளவு ஆராய்ச்சி செய்தது கிடையாது. இப்போது முதல் முறையாக ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு விளையாட செல்லும் இந்திய பேட்ஸ்மேன்கள், இந்தியாவில் ரன் அடிக்கவில்லை என்றால் எவ்வளவு விமர்சிக்கப்படுவார்களோ அந்த அளவிற்கு விமர்சிக்கப்படுகிறார்கள். இது கூடாது!” என்று கூறியிருக்கிறார்!