மீண்டும் எப்போது இந்திய அணிக்கு திரும்புவார் ? காயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தீபக் சாஹர்

0
96
Deepak Chahar

இந்த ஆண்டு ஐ.பி.எல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமானதாய் அமைய தீபக் சாஹரின் காயமும் ஒரு முக்கியக் காரணமாகும். போட்டிகள் நடந்த மும்பை மற்றும் புனே மைதானங்களில் புதுப்பந்து மிகப்பெரிய அளவில் ஸ்விங் ஆனது. ஆனால் இந்த ஸ்விங் சூழலைப் பயன்படுத்திக்கொள்ள சென்னை அணியில் தீபக் சாஹர் இல்லாதது பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது.

இந்த ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீபக் சாஹர் மேல் 15 கோடி முதலீடு செய்திருந்தது. அந்தளவிற்கு அவரது பந்துவீச்சை சென்னை அணி நிர்வாகம் நம்பியது. மேலும் அவரது பேட்டிங்கும் மேலும் மெருகேறி வர, அவர் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராகவே உருவாகி வந்தார். இதையெல்லாம் யோசித்தே சென்னை அணி அவரைப் பெரிய விலைக்கு வாங்கியது.

- Advertisement -

ஆனால் அதே சமயத்தில் இந்தியா வந்திருந்த வெஸ்ட் அணியுடனான கிரிக்கெட் தொடரில் தீபக் சாஹர் தொடையில் காயமடைந்து, பெங்களூர் இந்திய கிரிக்கெட் அகாடமியின் மேற்பார்வையின் கீழ் சென்று சிகிச்சை எடுத்தார். அவரை இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான முக்கிய வீரராக இந்திய அணி நிர்வாகம் பார்த்தது. இதனால் அவரது காயத்தின் மீதும் அதிகக் கவனம் செலுத்தியது.

இந்த நிலையில் ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் பொழுது, தொடரின் பாதியில் அதாவது சென்னை அணியின் முதல் ஏழு ஆட்டங்களுக்குப் பிறகு, அவார் ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயத்தைப் பரிசோதித்த இந்திய கிரிக்கெட் அகாடமி அவரை விளையாட அனுமதிக்கவில்லை. இதனால் தீபக் சஹார் தொடரிலிருந்து வெளியேறினார்.

இதற்கடுத்து ஐ.பி.எல் முடிந்து வந்த தென் ஆப்பிரிக்க அணியுடனான டி20 தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. அடுத்து அயர்லாந்து அணியுடனான தொடரிலும் அவர் பெயர் இல்லை. இங்கிலாந்து சென்ற இந்திய அணியோடும் அவர் செல்லவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் அவர் காயம் குறித்து தீபக் சாஹரே பேசியிருக்கிறார். அதில் அவர் “நான் இந்திய கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பின் கீழ் பயிற்சி பெற்று வருகிறேன். தற்போது தொடர்ச்சியாய் நான்கைந்து ஓவர்கள் பந்து வீசுகிறேன். ஆனால் ஆட்டத்திற்கான முழு உடற்தகுதியை எட்டு நான்கைந்து வாரங்களாவது தேவைப்படும்” என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் அவர் இங்கிலாந்து அணியுடனான டி20 தொடருக்குத் தயாராக இல்லையென்று தெரிகிறது. அதேசமயத்தில் அவர் ஜூலை கடைசி வாரத்தில் வெஸ்ட் அணிக்கு எதிராகத் துவங்கும் டி20 தொடரில் வாய்ப்பு இருக்கிறது!