அஸ்வின் பத்தி தெரியாம பேசாதிங்க.. அவர் எவ்வளவு முக்கியம் தெரியுமா? – கவாஸ்கர் அடுக்கிய காரணங்கள்!

0
2091
Gavaskar

இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடருக்கான முதல் இந்திய அணி அறிவிக்கப்பட்ட பொழுது அதில் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில் ஆசிய கோப்பையில் அக்சர் படேல் காயம் அடைந்திருக்க, அதன் காரணமாக உலகக் கோப்பை தொடருக்கான இறுதி இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் சேர்க்கப்பட்டது.

- Advertisement -

ஆரம்பத்தில் அவர் பெயர் சேர்க்கப்படாத பொழுது அவர் அணியில் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும் என்று பலத்த ஆதரவு குரல்கள் எழுந்தது. பல முன்னாள் வீரர்கள் கூட அவருக்கு ஆதரவாக பேசியிருந்தார்கள்.

அதே சமயத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அறிவிக்கப்பட்ட பிறகு, அவருடைய இடத்தை வாஷிங்டன் சுந்தர் இல்லை சாகல் போன்றவர்களுக்கு கொடுத்து இருக்க வேண்டும் என்கின்ற பேச்சுகள் வெளிவர ஆரம்பித்து இருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஏன் அணியில் முக்கியமானவர்? என்று இந்திய லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் தன்னுடைய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” புதிய பந்தில் தொடங்குவதற்கு பும்ரா, சமி, சிராஜ் மூன்று பேர் இருக்கிறார்கள். மூன்று பேரும் சேர்ந்து விளையாடுவார்களா? என்று தெரியாது. ஆனால் மூன்று பேருமே உலகத் தரமான பந்துவீச்சாளர்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பும்ரா ஒரு சிறிய தடுமாற்றத்துடன் இருந்தார். ஆனால் அவர் மிகப்பெரிய வீரர் எனவே அதே தவறை அடுத்து செய்ய மாட்டார்.

ஆனால் இது குறித்து பெரிய அளவில் கவலைப்பட வேண்டியது இல்லை. நாம் பார்க்க வேண்டியது மிடில் ஓவர்கள் பற்றிதான். ஆடுகளங்கள் இங்கு நன்றாக இருக்கின்றன. திருப்பம் மற்றும் பவுன்ஸ் இல்லாத ஆடுகளங்களில், சரியான லைன் பிடித்து வீச வேண்டும்.

இந்த இடத்தில்தான் அஸ்வின் மிக முக்கியமானவராக இருப்பார். அவருடைய அனுபவம் முக்கியமான காரணியாக மாறும். அவரை பெரிய போட்டிகளுக்கான லெவனில் விளையாடுவார்களா? என்று தெரியாது. ஆனால் அவர் மிடில் ஓவர்களில் உங்களுக்கு விக்கெட்டை பெற்று தரும் பந்துவீச்சாளர்.

மத்திம ஓவர்களில் பெரிய பார்ட்னர்ஷிப்புகள் உருவாகாமல் தடுத்து, எதிரணியை ஒரு சராசரியான டோட்டலுக்கு அடக்கி, பின்பு துரத்துவதற்கு எளிதாக வைத்துக் கொள்வதற்கு அஸ்வின் மிக முக்கியமான பந்துவீச்சாளராக இருப்பார்!” என்று அவர் கூறியிருக்கிறார்!