“பாப் டு பிளிசிஸ்கிட்ட ஈகோ காட்டாதிங்க.. உலக கோப்பைக்கு செலக்ட் பண்ணுங்க” – ஏபி.டிவில்லியர்ஸ் வேண்டுகோள்

0
96
Plessis

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி குறைந்தபட்சம் மூன்று உலகக் கோப்பை தொடர்களையாவது வென்று இருக்க வேண்டிய திறமை கொண்ட அணி. அந்த அளவிற்கு உலகத்தரமான வீரர்கள் அந்த அணியில் இருந்திருக்கிறார்கள்.

ஆனாலும் உலகக் கோப்பைத் தொடர் என்று வரும் பொழுது அதில் நாக் அவுட் சுற்றில் அவர்கள் திடீரென பதட்டம் அடைந்து ஒரு சாதாரண அணியை விட மோசமாக விளையாடி தோற்று வெளியேறுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் கடைசியாக தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து ஸ்டெயின், ஏபி டி வில்லியர்ஸ், பாப் டு பிளிசிஸ் ஆகியோர் நகர்ந்த பிறகு தென் ஆப்பிரிக்கா அணி மிகவும் பலவீனமான ஒரு அணியாக மாறியது. இந்த நிலையில் தற்போது அந்த அணியில் இருந்து அனுபவ வீரர் குயிண்டன் டி காக்கும் வெளியேறி இருக்கிறார்.

தற்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அவர்களுடைய பிரான்சிஸைஸ் சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் மட்டுமே இருக்கிறது. இந்த தொடருக்கு தென் ஆப்பிரிக்க உள்நாட்டில் கிரிக்கெட் ரசிகர்கள் நல்ல ஆதரவை கொடுப்பதால், வெற்றிகரமான தொடராக மாறி இருக்கிறது. இதன் மூலமாக அவர்களது நாட்டில் கிரிக்கெட் மீண்டும் செழிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரரான பாப் டு பிளிசிஸ் கடைசியாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடியிருந்தார். அதற்குப் பிறகாக உலகக் கோப்பை தொடர்களில் அவர் விளையாட தயாராக இருந்தும் கூட அவரை தேர்வு செய்யவில்லை. தற்பொழுது அவர் உலகெங்கும் டி20 லீக்குகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வருகின்ற ஜூன் மாதத்தில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடருக்கு அவரை தேர்வு செய்ய வேண்டும் என ஏ பி டி வில்லியர்ஸ் வெளிப்படையான கோரிக்கையை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திற்கு வைத்திருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் பொழுது “வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு பாப் டு பிளிசிஸ் சிறந்த வீரராக இருப்பார் என்றால் அவரைத் தேர்ந்தெடுங்கள். அப்படி இல்லையென்றால் அவரைத் தேர்வு செய்ய வேண்டாம். அவருடைய சிறப்பான முன்னேற்றத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அவருடைய தற்போதைய பார்ம் மற்றும் ஆர்வம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். அவர் பந்தை நன்றாக அடிக்கிறாரா? அவர் தனது வாழ்க்கையில் சிறந்த கிரிக்கெட்டை விளையாடிக் கொண்டிருக்கிறாராஇல்லையா? மேலும் இந்த உலகக் கோப்பைக்கு தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்க இடம் அல்லது மூன்று மற்றும் நான்காம் இடத்தில் அவர் பொருத்தமானவரா? இதற்குப் பதில் ஆம் என்றால் அவரைத் தேர்ந்தெடுங்கள்.

மற்றபடி அவரைத் தேர்வு செய்வதற்கு எந்தவித ஈகோவையும், அஜெண்டாவையும் காட்டாதீர்கள். நான் விளையாடிய காலங்களில் இதை நிறைய எதிர்கொண்டு விட்டேன்” என்று விரக்தியாக கூறி இருக்கிறார்!