“24.75கோடி சும்மா கொடுக்கல.. ஸ்டார்க் பவுலிங் மட்டுமல்ல வேற வேலை இருக்கு!” – கம்பீர் விளக்கம்!

0
836
Gambhir

நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் அதிகபட்ச விலையான 24.75 கோடி ரூபாய்க்கு சென்றார். இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசி வரை சென்று, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதி வாங்கியது.

இந்த முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஏல மேஜைக்கு கம்பீர் வந்திருந்தார். அவர் லக்னோ அணியில் இருந்து விலகி தற்பொழுது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மென்டராக இணைந்திருக்கிறார்.

- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக அவர் இரண்டு கோப்பைகளை வென்று கொடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் அணிக்குள் வந்ததும், ஏற்கனவே இருந்த நிலைமைகளை மாற்றி, தற்பொழுது கொல்கத்தா அணியை வலிமையாகவே உருவாக்கி இருக்கிறார் என்று கூறலாம்.

இந்த நிலையில் ஸ்டார்க்குக்கு ஏன் அவ்வளவு பணம் கொடுத்தோம் என்று அவர் கூறும் பொழுது “அவர் ஒரு எக்ஸ்-பேக்டர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. அவரால் புதிய பந்திலும் வீச முடியும் இறுதி நேரத்திலும் வீச முடியும். முக்கியமாக பந்துவீச்சு தாக்குதலை முன்னின்று வழிநடத்திச் செல்லக் கூடியவர்.

எங்களின் இரண்டு உள்நாட்டு பந்துவீச்சாளருக்கு உதவ வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கிறது. இவர்கள் இருவரும் திறமையானவர்கள் ஆனால் அவர்களுக்கு நடுவில் உதவுவதற்கு ஒருவர் தேவை. ஸ்டார்க் இந்த வேலையைத்தான் செய்யப் போகிறார்.

- Advertisement -

மேலும் ஸ்டார்க் பந்துவீச்சை பற்றியது மட்டும் கிடையாது : அவர் எங்களின் பந்துவீச்சு தாக்குதலை வழிநடத்த கூடியவராகவும் இருப்பதுதான் இங்கு மிக முக்கியமானது. மேலும் அவரைச் சுற்றியுள்ள எல்லோருக்கும் அவர் உதவுவது முக்கியமானது. எனவே அதற்கான பணத்தை நாம் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.

எங்களது பந்து வீச்சு வரிசையில் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். நாங்கள் எப்போதுமே வலுவான பந்துவீச்சு வரிசையை விரும்புகிறோம். இப்போது பந்துவீச்சில் எங்களிடம் போதுமான விருப்பங்கள் இருக்கிறது. என்னை பொருத்தவரை மிகவும் வலுவான பேட்டிங் வரிசையுடன் ஒப்பிடும்பொழுது, வலுவான பந்துவீச்சு வரிசையையும் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது!” என்று கூறியிருக்கிறார்!