“அடுத்து அஷ்வினை விளையாட வைக்காதிங்க.. ரோகித் டிராவிட் இதை செய்யுங்க.. அதான் நல்லது!” – சேவாக் கருத்து!

0
6232
Ashwin

நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய சிந்தனைக் குழு மூன்று சுழற் பந்துவீச்சாளர்களைக் களம் இறக்கி, ஆஸ்திரேலியா அணியை அதிரடியாக முடக்கி சுருட்டியது!

ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் உடன் நட்சத்திர மூத்த சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும் களம் இறக்கப்பட்டார். மேலும் தன்னுடைய சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் 4582 நாட்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட களம் இறங்கினார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அவர் ஒரு மெய்டன் உடன் 38 ரன்கள் மட்டும் தந்து கேமரூன் கிரீன் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். ஓரளவுக்கு சுழற் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்தில், உலகத் தரம் வாய்ந்த இந்தியாவின் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களும் விளையாடினால் என்ன நடக்கும்? என்று காட்டினார்கள்.

தற்போது இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் வீரேந்திர சேவாக் “அடுத்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று நினைக்கிறேன். முகமது சமி அற்புதமான பார்மில் இருக்கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து விக்கெட் கைப்பற்றி இருந்தார். டெல்லி விக்கெட் வித்தியாசமானது. மேலும் மைதானமும் சிறியது. அஸ்வினுக்கு வயது ஒரு காரணியாக இருக்கிறது. எனவே அவரைப் பெரிய போட்டிகளுக்காக இந்தியா பாதுகாக்கும் என்று நினைக்கிறேன்.

விக்கெட் கீப்பிங் செய்வதோடு மிடில் ஆர்டரில் கேஎல்.ராகுலை விளையாட வைத்ததற்காக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிடை பாராட்ட வேண்டும். இந்த நிலையில் ராகுல் பேட்டிங் செய்வது இந்திய அணியில் மிடில் ஆர்டரை பலமாக்கி இருக்கிறது.

- Advertisement -

ஒருவேளை கேஎல்.ராகுல் தனது இன்னிங்ஸை தொடங்கி சீக்கிரமே வெளியேறி இருந்தால், இந்தியா அடுத்து ஹர்திக் பாண்டியாவையும் சூரியகுமார் யாதவையும் தொடர்ந்து நம்ப வேண்டியதாக இருந்திருக்கும்.

இந்தியா இரண்டு விக்கெட் இழந்த பொழுது ஸ்ரேயாஸ் பேட்டிங் செய்ய வந்தார். அவர் சிறிது நேரம் எடுத்திருக்க வேண்டும். இந்த விக்கெட்டில் எடுத்ததும் அதிரடியாகச் செல்ல முடியாது. இருப்பினும் அவர் இளம் வீரர் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார். விமர்சிப்பது எளிதானது.

இப்போது இந்தியா வெற்றி பெற்று உள்ளதால் இந்த வீரர்களை நாம் ஆதரிக்க வேண்டும். ஸ்ரேயாஸ் இதே ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சமீபத்தில் சதம் அடித்திருந்தார் என்பதை நாம் மறக்கக்கூடாது.

இஷான் கிஷான் நல்ல ஃபார்மில் இருக்கிறார். நீங்கள் உங்கள் பேட்டை பந்து வரும் திசையில் வீச விரும்புகிறீர்கள். இப்படித்தான் இஷான் சென்றார். ஆனால் பந்து எவ்வளவு வெளியில் இருக்கிறது? என்பதை அவரால் உணர முடியவில்லை. இது எனக்கு பலமுறை நடந்திருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!