“விடக்கூடாது.. பாகிஸ்தான் ஒவ்வொரு போட்டியிலும் 400 ரன்கள் அடிக்கனும்!” – ரமீஷ் ராஜா அதிரடி கருத்து!

0
1181
Pakistan

தற்போது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் பயிற்சி போட்டிகளை நடத்த விடாமல் மழை ஒரு பக்கம் மிகப்பெரிய பிரச்சனைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது!

இந்த வகையில் நேற்று முன்தினம் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது!

- Advertisement -

இந்தப் பயிற்சி போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.வழக்கம்போல் துவக்க வீரர்கள் ஏமாற்றினார்கள். வழக்கம்போல் பாபர் அசாம் 80 ரன்கள், முகமது ரிஸ்வான் 103 ரன்கள் எடுத்தார்கள். அடுத்து வந்த சவுத் ஷகீல் 75 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 345 ரன்கள் குவித்தது.

இந்த நிலையில் பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரராக அனுப்பப்பட்ட ரச்சின் ரவீந்தரா 72 பந்தில் 97 ரன்கள் எடுத்தார். கேப்டன் கேன் வில்லியம்சன், டேரில் மிட்சல் மற்றும் மார்க் ஷாப்மேன் மூவரும் அதிரடியாக அரை சதங்கள் அடிக்க, 7 ஓவர்கள் மீதம் வைத்து நியூசிலாந்து வெற்றி பெற்றது.

தற்போது தொடர்ச்சியாக பாகிஸ்தான் தோல்வி முகத்தில் இருந்து வருகிறது. ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டிகள் தோல்வி அடைந்ததில் இருந்து, அந்த அணியின் நம்பிக்கை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

நடந்து முடிந்த பயிற்சி போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மற்றும் பாகிஸ்தான் வாரிய முன்னாள் தலைவர் ரமீஷ் ராஜா கூறும் பொழுது
“இது ஒரு பயிற்சி ஆட்டம் என்று எனக்கு தெரியும். ஆனாலும் வெற்றி என்பது வெற்றிதான். வெற்றி பெறுவது ஒரு பழக்கமாக இருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தான் தோற்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

முதலில் பாகிஸ்தான் ஆசியக் கோப்பையில் தோற்றார்கள். இப்போது இங்கே. பாகிஸ்தான் 345 ரன்கள் எடுக்க இது நல்ல சேஸாக அமைந்தது. இந்தியாவில் நீங்கள் இது போன்ற ஆடுகளங்களை பெறுவீர்கள். உங்கள் பந்துவீச்சு மோசமாக இருந்தால் நீங்கள் 400 ரன்கள் அடிக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் பேட்டிங் யுக்திகளை மாற்ற வேண்டும். நீங்கள் ரிஸ்க் எடுக்க வேண்டும். ஆனால் நாம் அப்படி செய்ய மாட்டோம். நான் முதலில் நிதானமாக விளையாடி பின்புதான் கியர்களை மாற்றுவோம்!” என்று கூறியிருக்கிறார்!