“சந்தேகமே வேண்டாம் இவர் தோனியாவே மாறிட்டாரு.. பிரமிக்க வைக்கிறாரு” – சுரேஷ் ரெய்னா பேச்சு

0
360
Raina

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஒரு போட்டியை மீதம் வைத்து வென்று இருக்கிறது. இந்த நிலையில் தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி தரம்சாலா மைதானத்தில் மார்ச் ஏழாம் தேதி துவங்குகிறது.

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி பெற்றிருக்கும் டெஸ்ட் வெற்றி இந்திய கிரிக்கெட்டிலும் உலக கிரிக்கெட்டிலும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட்ட இந்திய இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக எதிர்கால இந்திய அணி எப்படி அமையும்? யாரெல்லாம் அடுத்த பத்தாண்டுக்கான வீரர்களாக இந்திய அணியில் தொடர்வார்கள்? என்பது குறித்து, தற்பொழுது ஓரளவுக்கு நல்ல பார்வை கிடைத்திருக்கிறது.

மேலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து மிகச்சிறப்பாக இருந்து வருகிறார். முன்னணி வீரர்கள் இல்லாத பொழுதும் கூட அவர் மூத்த வீரர்களான புஜாரா மற்றும் ரகானே ஆகியோரை கொண்டு வருவதற்கு விரும்பவில்லை. மாறாக எதிர்கால அணியை கட்டமைப்பதற்காக இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார்.

இதிலும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு, சீனியர் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல்ராகுல் இருவரும் கிடைக்க மாட்டார்கள் என்று தெரிந்தும், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு புஜாரா சிறப்பான ஃபார்மில் இருந்த பொழுதும் கூட அவரை அணிக்குள் கொண்டு வரவில்லை. இந்தியாவில் வேகப்பந்து வீச்சில் மிகச்சிறப்பாக செயல்பட்டு இருந்த உமேஷ் யாதவையும் கொண்டு வராமல் புதிய வேகப்பந்துவீச்சாளருக்கே வாய்ப்பு கொடுத்தார்.

- Advertisement -

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறும்பொழுது ” ரோகித் சர்மா முதலில் சர்பராஸ் கான் அடுத்து துருவ் ஜுரல் என தொடர்ந்து இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கான பெருமையை அவருக்கு நாம் கொடுக்க வேண்டும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்ற பிறகு மகேந்திர சிங் தோனிக்கு பிறகு ரோகித் சர்மாதான் அவருடைய இடத்தில் இருக்கிறார்.

ரோகித் சர்மா தன்னுடைய திட்டமிடலில் பிரமிக்க வைக்கிறார். அவர் இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் வீரர்களை ரொட்டேட் செய்து பயன்படுத்துவது நான் இதுவரை பார்த்திடாத ஒன்றாக இருக்கிறது. முன்பு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அதிக காயங்கள் இருந்ததை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இதை ரோகித் மிக நன்றாக சமாளித்து வருகிறார்.

இதையும் படிங்க : 33 பந்தில் அதிவேக சர்வதேச டி20 சதம்.. டேவிட் மில்லர் ரோகித் சர்மா சாதனைகள் உடைந்தது

தற்பொழுது பும்ரா மற்றும் சிராஜ் இருவரை வைத்து அவர் நகர்த்துகிறார். இதில் இருவருக்குமே அவர் ஓய்வு கொடுத்திருக்கிறார். இதற்காக ஆகாஷ் தீப்பை கொண்டு வந்து அறிமுகப்படுத்தியிருக்கிறார். ரோகித் அழுத்தத்தையும் வீரர்களையும் மிகவும் சிறப்பாக கையாண்டு வருகிறார்” எனக் கூறியிருக்கிறார்.