“இனிமே நீங்க இங்க வரவே வராதிங்க”.. ஜான்சனை துரத்திவிட்ட ஆஸி கிரிக்கெட்.. காரணம் என்ன?

0
915
Johnson

தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள்ஆஸ்திரேலியாவில் மோதி வருகின்றன.

சில நாட்களுக்கு முன்பு பெர்த் மைதானத்தில் இந்த தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 360 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இந்த தொடரின் அடுத்த போட்டியில் கிறிஸ்மஸ் முடிந்து அடுத்த நாளான டிசம்பர் 26 ஆம் தேதி பாக்சிங் டே அன்று மெல்போன் மைதானத்தில் துவங்குகிறது.

மேலும் மூன்றாவது போட்டி சிட்னி மைதானத்தில் அடுத்த வருடம் அதாவது ஜனவரி 3ஆம் தேதி துவங்கி நடைபெறுகிறது. இந்தப் போட்டியுடன் டேவிட் வார்னர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார். ஓய்வு பெற இருக்கும் டேவிட் வாரனரை வழி அனுப்பி வைக்க சிறப்பான முறையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஏற்பாடுகளை செய்திருக்கிறது.

இந்த நிலையில் டேவிட் வார்னரை ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஜான்சன் கடுமையான முறையில் விமர்சனங்கள் செய்து வந்தார். மேலும் ஆஸ்திரேலியாவின் தேர்வு குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் குற்றவாளியான வார்னருக்கு இதெல்லாம் செய்யக்கூடாது என்று மேலும் விமர்சனங்களை அதிகமாக்கினார்.

- Advertisement -

இருந்தபோதிலும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அவரை விருந்தினர் பேச்சாளராக பாகிஸ்தான் ஆஸ்திரேலிய மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் அழைத்து கௌரவப்படுத்தி இருந்தது. ஆனாலும் அவர் தொடர்ச்சியான தனது கடுமையான விமர்சனங்களை நிறுத்திக் கொள்ளவே இல்லை.

இந்த நிலையில் முதல் டெஸ்டின் பாதியின் போதே அவரை விருந்தினர் பேச்சாளர் என்கின்ற இடத்திலிருந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் நீக்கிவிட்டது என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. மேலும் இவருடைய இடத்தில் மைக்கேல் ஹசி இடம் பெற்று பேசினார் என்று கூறப்படுகிறது. தற்பொழுது ஜான்சனை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வெளியேற்றியது, ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் விவாதத்துக்குரிய பேச்சாக மாறியிருக்கிறது!