“ஆடுகளங்களை அமைப்பதில் இந்தியா தலையிடுகிறதா?” – பேட் கம்மின்ஸ் தந்த தரமான பதில்!

0
3259
Cummins

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் ஆரம்பித்ததில் இருந்து இந்திய அணி நிர்வாகத்தின் மீது சம்பந்தம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

இதன் உச்சகட்டமாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஹசன் ராஸா இந்திய பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் சிறப்பு பந்து தரப்படுகிறது என்கின்ற அளவுக்கு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

- Advertisement -

இப்படி தொடர்ச்சியாக இந்திய அணி நிர்வாகத்தின் மீது இந்த உலகக் கோப்பையில் சர்ச்சையான புகார்கள் தொடர்ந்து வைக்கப்படுகிறது.

இதற்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகச் சிறப்பான உலக தரமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறது. இதை சிலரால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

இந்த நிலையில் இன்று மும்பையில் அரையிறுதி போட்டியில் இந்திய அணிக்கு சாதகமாக புதிய ஆடுகளம் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த ஆடுகளத்தில் இந்த உலகக் கோப்பையில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் விளையாடப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் இந்த ஆடுகளம் குறித்து நியூசிலாந்து அணி தரப்பில் இருந்து எந்த விதமான புகார்களும் தரப்படவில்லை. ஐசிசி ஆடுகளத்தை தயாரிப்பதற்கு தொடரை நடத்தும் மைதானத்திற்கு என்ன உரிமையை தந்திருக்கிறதோ அதுதான் பின்பற்றப்பட்டு இருக்கிறது. இதை கண்காணிக்க ஐசிசி பொறுப்பில் அதிகாரிகள் இருக்கிறார்கள்.i

இந்த நிலையில் இது சம்பந்தமான கேள்விக்கு பதில் அளித்த ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் கூறும்பொழுது “நான் இப்படியான அறிக்கையை பார்த்தேன். வெளிப்படையாக ஐசிசியில் ஆடுகள தயாரிப்பாளர் ஒருவர் இருக்கிறார். அவர்கள் இரு அணிக்கும் ஆடுகளம் நேர்மையாக இருப்பதை உறுதி செய்கிறார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

இதுவரை நாங்கள் விளையாடிய போட்டிகளில் அப்படியான எந்த சிக்கல்களையும் பார்க்கவில்லை!” என்று இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தின் மீது கூறப்படும் சர்ச்சையான குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தரும் விதமாக பேசியிருக்கிறார்.