அணி வெற்றி பெற்றால் எல்லாம் மாறிவிடுமா ….. டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஆட்டம் = கே.எல்.ராகுலை கடுமையாக விமர்சித்த டோட்டா கணேஷ்!

0
91

தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் நடைபெற்று வருகிறது . இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூர் அணி சிறப்பாக ஆடி 20 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்தது .

அந்த அணியின் விராட் கோலி பாப் டூப்ளசி விராட் கோலி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் அதிரடியான அரை சதத்தால் ஆர் சி பிரியாணி 20 அவர்களின் 213 ரன்கள் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோனிக்கு தூக்கமே ஆட்டம் கண்டது .

- Advertisement -

பவர் பிளே ஓவர்களில் அந்த அணி மூன்று விக்கெட்டுகளை இழந்தாலும் மார்க்கஸ் ஸ்டானிஸ் மற்றும் நிக்லஸ் பூரன் ஆகியோரின் அருமையான ஆட்டம் லக்னோ அணிக்கு வெற்றியை தேடித்தந்தது .

லக்னோ அணி பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல் நேற்று ஆடிய விதம் மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இரண்டு அணிகளும் சேர்ந்து 40 ஓவர்களில் 425 ரன்கள் எடுத்துள்ள போட்டியில் 10 பந்துகளுக்கு மேல் ஆடிய ஒரு வீரர் 100 ஸ்ட்ரைட்டிற்கு கம்மியாக வைத்திருந்தது கே எல் ராகுல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 20 பந்துகளில் ஆடி 18 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். இது பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும் கர்நாடகா அணியின் முன்னாள் வேதப்பந்துவீச்சாளருமான டோட்டா கணேஷ் கே எல் ராகுலின் நேற்றைய ஆட்டத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார்..

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கணேஷ் ” பவர் பிளே ஓவர்களில் கூட அவரிடம் இன்டெண்ட் இல்லை . நான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான ஒரு டி20 ஆட்டம் என்றால் அது இதுதான் . எந்த ஒரு வீரரும் டி20 போட்டியில் இப்படி ஆடினான் பார்த்ததில்லை . உங்கள் அணி 200 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய சூழலிலும் இன்டெண்ட் இல்லாமல் எப்படி ஆட முடிகிறது. உங்கள் மனதில் என்னதான் இருக்கிறது . முதலில் சில காலம் நடந்தது ஆனால் இப்பொழுது அதுவே தொடர்கதையாகி விட்டது. இது ஒன்றும் பள்ளி கிரிக்கேட் அல்ல சர்வதேச கிரிக்கெட் தளம் ! என கடுமையாக கூறினார்.

- Advertisement -

இது பற்றி பதிவிட்டிருக்கும் கணேஷ் ” இது டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஆட்டம். ஒரு டி20 கிரிக்கெட் போட்டியின் கேப்டன் மற்றும் துவக்க வீரர் 200 ரண்களை சேஸ் செய்யும்போது இப்படி ஆடுவது என கடுமையான சொற்களால் விமர்சித்துள்ளார் . இதற்கு முன்பு வெங்கடேஷ் பிரசாத் கே எல் ராகுலை கடுமையாக விமர்சித்து வரும்போது டோட்டா கணேஷ் கே.எல் ராகுலுக்கு ஆதரவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.