“பெட்ல ரோஜா தூவி வைப்பாங்கனு நினைச்சிங்களா.. கேப்டன் பதவி ஈசி இல்ல..!” – ஷாகித் அப்ரிடி புது குற்றச்சாட்டுடன் அதிரடி தாக்கு!

0
3552
Afridi

நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 282 ரன்கள் எடுத்தது. சென்னையில் முதலில் பேட்டிங் செய்யும்பொழுது 250 ரன்கள் என்பது மிகவும் சரியான ரன்னாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த இலக்கை நோக்கி விளையாடிய சிறிய அணியான ஆப்கானிஸ்தான் அணி, ஒரு ஓவர் மீதம் வைத்து இலக்கை எட்டி அபார வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

- Advertisement -

இந்தத் தோல்வியை ஒரு மாதிரியாக ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தால் கூட, தோல்வி அடைந்த விதத்தை ஏற்றுக் கொள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் யாரும் தயாராக இல்லை. காரணம் எந்த ஒரு இடத்திலும் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் அழுத்தத்தை உணரவே கிடையாது. அவர்கள் மிக எளிதாக எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள்.

தற்பொழுது இதுதான் பாகிஸ்தான் அணி நிர்வாகத்தின் மீதும் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மீதும் எக்கச்சக்க விமர்சனங்களை கொண்டு வருவதோடு, புதிய குற்றச்சாட்டுகளையும் முன்னாள் வீரர்களை முன்வைக்க தூண்டுதலாக அமைகிறது.

அதே சமயத்தில் இதுவரை யாரும் பாபர் கேப்டன்சி மேல் அந்த குறிப்பிட்ட போட்டி பற்றி வைக்காத ஒரு கோணத்தில் இருந்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தன்னுடைய குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார். அதை அவர் விளக்கவும் செய்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “எதிரணிக்கு அழுத்தம் கொடுப்பது ஒரு கேப்டனின் வேலை. ஒரு வேகப்பந்துவீச்சாளர் வீசுகிறார் அந்த சூழ்நிலையில் ஒரு ஸ்லிப் இல்லை. 12 பந்துகளில் நான்கு ரன்கள்தான் தேவைப்படுகிறது. ஆனால் அந்த நேரத்தில் பாய்ண்ட் திசையில் இருந்த ஃபீல்டர், பேக்வேர்ட் பாயிண்டுக்கு செல்கிறார். இப்படி அழுத்தத்தை உருவாக்க பாபர் எதுவுமே செய்யவில்லை.

இதே பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய உடனேயே, உள்வட்டத்தில் பீல்டர்களைக் கொண்டு வந்து பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் மீது அழுத்தத்தை திணித்தது. இப்படித்தான் பாபர் செய்ய தவறியிருக்கிறார்.

உங்கள் நாட்டின் அணிக்கு நீங்கள் கேப்டனாக இருப்பது பெருமைக்குரிய விஷயம். ஆனால் அது ரோஜா பூக்கள் தூவப்பட்ட படுக்கை கிடையாது. நீங்கள் சரியாக செய்யும் பொழுது எல்லோரும் புகழ்வார்கள். நீங்கள் தவறாக செய்யும் பொழுது உங்களையும் உங்கள் தலைமை பயிற்சியாளரையும் விமர்சிக்க தான் செய்வார்கள்!” என்று கூறியிருக்கிறார்!