இன்னைக்கு இது தேவையா.. எவ்ளோ வலி.. பாபர் கோலியிடம் டிஷர்ட் வாங்கியதால் கடுப்பான வாசிம் அக்ரம்.!

0
20264

இப்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று 8வது முறையாக பாகிஸ்தான் அணியை உலக கோப்பைகளில் வீழ்த்தி இருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 191 ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 30.3 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மிகச் சிறப்பாக விளையாடி 86 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இந்தப் போட்டிக்கு பின்பு விராட் கோலி மற்றும் பாபரதம் சந்தித்து பேசிக்கொண்ட காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது போட்டிக்கு பின் விராட் கோலி மற்றும் பாபர் அஸ்ஹம் இருவரும் சந்தித்து உரையாடினர். அப்போது தனது கையெழுத்திட்ட இரண்டு ஜெர்சிகளை பாபர அசாமுக்கு பரிசாக அளித்திருக்கிறார் விராட் கோலி. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது.

இந்த காணொளிகளை பகிர்ந்து வரும் பலரும் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் ஆகியோரின் நடவடிக்கைகளை பாராட்டி வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் அணியின் உன்னால் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் இது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் இந்த நேரங்களில் இது போன்ற விஷயங்கள் தேவைதானா என விராட் கோலி மற்றும் பாபரின் நடவடிக்கைகளை கடுமையாக சாடியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் நிகழ்ச்சியின் போது பேசிய அவர் ” விராட் கோலி இடமிருந்து பாபர் அசாம் இரண்டு டி ஷர்ட் பெரும் காணொளியை நானும் பார்த்தேன். மேலும் இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. என்னுடைய கேள்வி என்ன என்றால் உங்கள் நாட்டின் ரசிகர்கள் உங்களது மோசமான ஆட்டத்தால் மனம் உடைந்து இருக்கும் நேரத்தில் இது போன்ற ஒரு நிகழ்ச்சி தேவைதானா.? மேலும் இதை தனிப்பட்ட முறையில் வைத்திருக்கலாம் திறந்த மைதானத்தில் ஏன் நடத்தி இருக்க வேண்டும் .?என கேள்வி எழுப்பி இருக்கிறார் .

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அக்ரம்” இதைத்தான் நான் கூறுகிறேன். இன்றைக்கு இது போன்ற ஒரு நிகழ்ச்சி தேவைதானா.? உங்களது அங்கிள் மகன் அல்லது வேறு யாரோ ஒருவர் விராட் கோலியின் கையெழுத்திட்ட டி-ஷர்ட் கேட்டிருக்கலாம். அதை நீங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் சென்று கூட வாங்கி இருக்கலாம். ஆனால் இப்படி திறந்த மைதானத்தில் வாங்குவதும் அது தொடர்பான காணொளிகள் வைரல் ஆவதும் ரசிகர்களை மீண்டும் காயப்படுத்துகிறது என தெரிவித்து இருக்கிறார்.

இந்தப் போட்டிக்கு பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிற்கு பாபர் அசாம் வரவில்லை பாகிஸ்தான் அணியின் தலைமை இயக்குனர் மிக்கி ஆர்தர் தான் கலந்து கொண்டார். பாகிஸ்தான் அணி அடுத்து வரும் போட்டியில் அக்டோபர் 20 ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியை சந்தித்து விளையாட இருக்கிறது.