நான் ஆரம்பத்துல நல்ல டச்ல இல்ல.. இந்த விஷயம்தான் மேட்ச்ல என்னை மாத்துச்சு – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
594
DK

ஐபிஎல் 2024. இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையேயான போட்டியில், கடைசி நான்கு ஓவர்களில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக் மற்றும் மகிபால் லோம்ரர் இருவரும் அதிரடியாக விளையாடி ஆர்சிபியை வெல்ல வைத்தனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் 45 ரன்கள் எடுக்க, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் சேர்த்தது. இந்த முறை ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் யாஸ் தயால் இருவரும் பவர் பிளே மற்றும் இறுதி கட்ட ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்துவீசி இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்கடுத்து விளையாடிய ஆர்சிபி அணிக்கு நட்சத்திர பேட்ஸ்மேன்கள் யாரும் மேல் வரிசையில் இருந்து ரன்கள் எடுக்கவில்லை. இந்த நிலையில் விராட் கோலி மட்டும் தாக்குப் பிடித்து விளையாடி 49 பந்துகளில் 77 ரன்கள் குவித்து, ஆட்டத்தை முடித்துக் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக ஆட்டம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பக்கம் வருவது போல் இருந்தது.

இந்த சூழ்நிலையில் பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் 17 மற்றும் 19ஆவது ஓவரை அர்ஸ்தீப் சிங்கை வீச வைக்காமல் 18 மற்றும் 20வது ஓவருக்கு தள்ளினார். இது ஆட்டத்தில் ஆர்சிபி அணிக்கு ஒரு சிறிய சாதகத்தை உருவாக்கியது. 17வது சாம் கரன் வீசி ஒரு விக்கெட் கைப்பற்றினாலும், இரண்டு பவுண்டரிகளை மிக சுலபமாக கொடுத்தார். 19ஆவது ஓவரில் ஹர்சல் படேல் வழக்கம் போல் ரம்மி வாரி கொடுத்தார்.

இந்த நிலையில் கடைசி ஓவரில் பத்து ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டபோது, அர்ஸ்தீப் சிங் ஓவரில் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து தினேஷ் கார்த்திக் ஆர்சிபி அணியை வெற்றி பெற வைத்தார். இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் 10 பந்தில் 28 ரன்கள், மகிபால் லோம்ரர் 8 பந்தில் 17 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க: கிரிக்கெட்டை விளம்பரப்படுத்த மட்டுமே என்னை டி20 இந்திய அணியில் வச்சிருக்காங்க – விராட் கோலி பேச்சு

வெற்றிக்குப் பின் பேசிய தினேஷ் கார்த்திக் “நான் ஆரம்பத்தில் கண்ட்ரோலாக இல்லை. எனக்கு சில ரன்கள் கிடைக்க நான் கொஞ்சம் கண்ட்ரோலுக்கு வந்தேன். ஆனாலும் லோம்ரர் அடித்த சிக்ஸ் என் மீதான பிரஷரை எடுத்தது. அவர் மிகவும் அமைதியாக தெரிந்தார். எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. எனவே நான் அவரிடம் தொடர்ந்து அப்படியே அமைதியாக இருக்கும் படி சொன்னேன். ஹர்சல் படேல் தந்திரமான பந்துவீச்சாளர். அவரது டிப்பிங் பந்தை தவறவிட்டால் காலி ஆகி விடுவோம். எனவே ஸ்கூப் ஆடக் காத்திருந்தேன். கடைசியாக வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்தோம்” என்று கூறியிருக்கிறார்.