இந்தியா – நியூசிலாந்து போட்டியில் கேன் வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்த போவது இந்த பவுலர் தான் – தினேஷ் கார்த்திக் உறுதி

0
123
Dinesh Karthik and Kane Williamson

இந்தியா அணி தற்போது டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணியை சந்தித்தது. வழக்கம் போல் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று பலர் நினைத்த நிலையில் இந்திய அணி அந்த போட்டியில் தோல்வி அடைந்தது. அதிலும் பாகிஸ்தான் அணியின் 1 விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் இந்திய அணி தோல்வியுற்றது. இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி தோற்றது கிடையாது என்ற வரலாறு தற்போது முடிவுக்கு வந்துவிட்டது.

இதனால் அணியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே 5 பந்துவீச்சாளர்களை மட்டுமே நம்பிச் செல்வதால் தோல்வி செல்கிறோம் என்று பலரும் சொல்லி விட்டனர். தற்போது இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக் ஒரு புதிய வீரரை அணியில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் பேசும் பொழுது இந்திய அணியில் எப்படியாவது சர்தூல் தாகூருக்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பங்கேற்றவர் தாகூர். சிறப்பாக பந்து வீசி பல முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணிக்கு கோப்பை வென்று கொடுத்தார். எப்போதெல்லாம் விக்கெட் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் ஓவருக்கு ஒன்று அல்லாமல் 2 விக்கெட்டுகளை பெற்றுத்தந்து சில போட்டிகளில் சிறப்பாக பங்காற்றினார். இதனால் அமீரக மைதானங்களில் பந்து வீசிய அனுபவம் அவருக்கு சிறப்பாக இருக்கிறது. இந்த அனுபவம் இந்திய அணிக்கு நிச்சயம் கை கொடுக்கும் என்றும் இவரை அணியில் இணைத்தால் எதிரணியின் முக்கிய விக்கெட்டான நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனின் விக்கெட்டை இவர்தான் வீழ்த்துவார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

சர்தூல் தாகுரை அணியில் இணைத்து தினேஷ் கார்த்திக் கூறியது போல அவர் வில்லியம்சனின் விக்கெட்டை எடுப்பாரா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்