நீக்கம் என்ற வார்த்தை எனக்கு பழகி போய்விட்டது – தினேஷ் கார்த்திக் உருக்கம்

0
2867

டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவியதை அடுத்து சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை பிசிசிஐ அதிரடியாக நீக்கி உள்ளது. சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழு 4 முக்கிய தொடர்களுக்கு இந்திய அணியை தேர்வு செய்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, 2021 டி20 உலக கோப்பை ,ஆசியக் கோப்பை 2022 மற்றும் டி20 உலக கோப்பை 2022 ஆகிய தொடர்களுக்கு சேத்தன் சர்மா தலைமையிலான குழுவே அணியை தேர்வு செய்தது.

- Advertisement -

இதில் இந்திய அணி ஒரு முறை மட்டும் தான் இறுதி போட்டிக்கு சென்றது. மற்ற மூன்று முறையும் தோல்வியை தழுவியதால் சேத்தன் சர்மா குழுவை பிசிசிஐ நீக்கி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தினேஷ் கார்த்திக் பி சி சி ஐ யின் இந்த நடவடிக்கையை யாருமே எதிர்பார்க்கவில்லை. அது நிச்சயம் ஆச்சரியத்தை அளிக்கும் முடிவாக தான் இருந்தது.

நீக்கம் என்ற வார்த்தை எனக்கு புதுசு அல்ல. ஏற்கனவே பழகிய ஒன்று. இனிமேல் நான் அந்த வார்த்தையை கேட்க மாட்டேன் என நினைக்கிறேன். இப்போது என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறது. புதிய தேர்வு குழு அணியை எப்படி கட்டமைக்கிறார்கள் ? எப்படி வீரர்களை தேர்வு செய்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். பழைய தேர்வுக்குழு சென்றதால் புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நாம் பார்க்க வேண்டும்.

தேர்வு குழுவினரின் பணி தன்னலமற்றது. சில சமயம் அவர்களுடைய கடின உழைப்பு கண்டு கொள்ளாமலே போய்விடும். 40 முதல் 45 வீரர்களில் இருந்து 15 பேரை தான் தேர்வு செய்ய வேண்டும் என்பது மிகவும் கடினமான பணி. ஆனால் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு அதை சிறப்பாகவே செய்ததாக நான் கருதுகிறேன். தற்போது புதியவர்கள் அந்த பொறுப்புக்கு வர இருக்கிறார்கள்.

- Advertisement -

அவர்கள் சில கடினமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்குதள்ளப்பட்டு இருக்கிறார்கள என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். புதிய தேர்வுக்குழுவினருக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இறுதியில் புதிய தேர்வுக்குழு பொறுப்பு ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து, இலங்கை அணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளன. அந்தத் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வது புதிய குழுவின் முதல் பணியாக இருக்கும் .