டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவிக்க போவது இந்த இரண்டு வீரர்கள் தான் – தினேஷ் கார்த்திக் ஓப்பன் டாக்

0
356
Dinesh Karthik T20

கடந்த 2020ம் ஆண்டு நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கொரோனா காரணமாக தள்ளிப் போனது. இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்து இருந்தது. வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்கவுள்ள இந்தத் தொடருக்கு தற்போதே ஒவ்வொரு அணிகளும் தயாராகி வருகின்றன.

தொடர் ஆரம்பிக்க இன்னமும் ஒரு மாத காலத்திற்கும் மேலான நாட்கள் இருந்தாலும் தற்போதே சில நாடுகள் தொடரில் பங்கேற்கப் போகும் வீரர்களின் பெயரை வெளியிட்டு விட்டனர். நியுசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் எல்லாம் ஏற்கனவே ஸ்குவாடை வெளியிட்டு தொடருக்கு தயாராக காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமை யாருக்கு கிடைக்கும் என்ற கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான தினேஷ் கார்த்திக் பதில் கூறியுள்ளார். கொரோனா கட்டுப்பாடுகளுடன் இந்தத் தொடர் நடைபெறுவதால் வீரர்கள் மனதளவிலும் இந்தத் தொடரில் தங்களின் போராட்ட குணத்தை வெளிக்காட்ட வேண்டியது இருக்கும்.

Rohit Sharma and Warner

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் இந்தத் தொடரில் அதிக ரன்களை அடிக்கப் போவது ஒன்று ரோகித்தாக இருக்கும் அல்லது வார்னராக இருக்கும் எனக் கூறியுள்ளார். கடந்த 2007ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்ற போது ரோகித்துடன் இணைந்து ஆடியுள்ளார் கார்த்திக். இது குறித்து அவர் கூறுகையில், “இருவருமே நன்கு அனுபவம் வாய்ந்த துவக்க வீரர்கள். இதில் ஒருவர் தான் இந்த உலகக்கோப்பையின் சிறந்த வீரராக இருப்பார்” என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

மேலும், “உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் ரோகித் மிகவும் சிறப்பாக செயல்படுவார் என்றும் இந்திய அணி சிறப்பாக ஆட இவர் டாப் ஆர்டரில் கொடுக்க வேண்டிய துவக்கம் மிக முக்கியம்” எனக் கூறினார். வார்னர் பற்றிக் கூறுகையில் வார்னர் அதிக நாள் கிரிக்கெட் எதுவும் ஆடவில்லை. அதனால் வார்னர் சிறப்பாக ஆட வேண்டும் என்று குறியோடு இருக்கிறார். இப்படிப்பட்ட வார்னர் தான் அதிகம் பயப்பட வேண்டியவர். அவரிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கலாம் என்று கார்த்திக் கூறியுள்ளார்.

- Advertisement -