டிகே-வின் ஆல் டைம் இந்திய பிளேயிங் XI.. வியப்பான 2 வீரர்கள்.. விராட்டுக்கு பொறுப்பு இல்லை

0
2
Virat

இந்திய அணிகள் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தன்னுடைய ஆல் டைம் டி20 இந்திய பிளேயிங் லெவனை கூறியிருக்கிறார்.

இந்திய அணி நீண்ட ஒய்வுக்கு பிறகு இந்த மாதம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி யுஏஇல் துவங்க இருக்கும் ஆசியக் கோப்பை டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையில் விளையாட இருக்கிறது. மேலும் எட்டு முறை ஆசியக் கோப்பை தொடரை வென்று அதிக முறை வென்ற அணியாகவும் இருக்கிறது.

- Advertisement -

விராட் கோலி கேப்டன் இல்லை

தற்போது இந்திய டி20 ஆல் டைம் பிளேயிங் லெவனை தினேஷ் கார்த்திக் வெளியிட்டு இருக்கிறார். இதில் தன்னுடைய ஆர்சிபி நண்பரான விராட் கோலியை கேப்டன் பொறுப்புக்கு நியமிக்கவில்லை. மேலும் இந்த பிளேயிங் லெவனில் தன்னுடைய பெயரையும் அவர் இணைத்துக் கொள்ளவில்லை.

ஆச்சரியப்படும் விதமாக இதுவரை அதிக அனுபவம் இல்லாத அபிஷேக் சர்மாவை துவக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா இடத்தில் வைத்திருக்கிறார். அடுத்த இரண்டு இடங்களுக்கு விராட் கோலி மற்றும் தற்போதைய இந்திய டி20 கேப்டன் சூரியகுமார் யாதவை கொண்டு வந்திருக்கிறார். ஐந்து மற்றும் ஆறாவது இடத்திற்கு ஆல் ரவுண்டர்கள் யுவராஜ் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா வைத்திருக்கிறார்.

- Advertisement -

யார் கேப்டன்?

மேலும் இந்த அணிக்கு விக்கெட் கீப்பராகவும் கேப்டனாகவும் மகேந்திர சிங் தோனியையும், இன்னொரு ஆல் ரவுண்டராக அக்சர் படேலையும் அடுத்த இரண்டு இடங்களில் வைத்து பேட்டிங் வரிசையை 8 வரையில் ஆழமாக வைத்திருக்கிறார்.

மேலும் அடுத்த மூன்று இடங்களுக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா, மேலும் அனுபவம் இல்லாத இன்னொரு வீரரான சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை வைத்து பௌலிங் யூனிட்டை செட் செய்திருக்கிறார். இந்த அணிகள் குல்தீப் யாதவுக்கு இடம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் வாய்ப்பே கிடையாது.. ஆசிய கோப்பை பைனலுக்கு இவங்கதான்.. ஆச்சரியம் காத்திருக்கு – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

தினேஷ் கார்த்திக்கின் ஆல் டைம் இந்தியா டி201 XI: அபிஷேக் சர்மா, ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா, எம்எஸ் தோனி (கேட்ச்), அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, மற்றும் வருண் சகரவர்த்தி.

- Advertisement -