இன்னும் சில நாட்களில் துவங்க இருக்கும் ஆசிய கோப்பை டி20 தொடரில் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெறாது எனவும், தகுதி பெறும் மற்ற இரண்டு அணிகள் எது? என்பது குறித்தும் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்திருக்கிறார்.
யுனைடெட் அரபு எமிரேட்டில் எட்டு ஆசிய அணிகள் பங்கு பெறும் ஆசியக் கோப்பை தொடர் t20 வடிவத்தில் இந்த மாதம் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் துவங்குகிறது. இந்தியா பாகிஸ்தான் யுஏஇ மற்றும் ஓமன் ஒரு பிரிவிலும், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் இன்னொரு பிரிவிலும் இடம் பெற்று இருக்கின்றன.
நிபந்தனைகளுக்கு ஏற்ற அணி
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை பீட்ரூட்டை தொடரின் இறுதி போட்டிக்கு எந்த இரண்டு அணிகள் தகுதி பெறும்? என்பது குறித்து பேசி இருக்கிறார். அவர் பாகிஸ்தான் அணியை தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் பேசும் பொழுது “இலங்கையிடம் எல்லா கண்டிஷனுக்கும் ஏற்ற அணி இருக்கிறது. இலங்கை ஒரு நல்ல அணி. அவர்கள் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டியை எட்டினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அது இந்தியா-இலங்கை விளையாடும் இறுதிப் போட்டியாக இருக்கும். இந்த இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடினால் இது சாத்தியமான விஷயமே”
சூப்பர் ஸ்டாராக மாறுவார்கள்
“தற்போது இலங்கை அணி சமநிலையாக எல்லா விஷயங்களையும் உள்ளடக்கி இருக்கிறது. சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் மிடில் வரிசை மேலும் பினிஷர்கள், இத்துடன் கண்டிஷனுக்கு ஏற்ற சுழல் பந்துவீச்சாளர்கள் மேலும் ஆல் ரவுண்டர்கள் என அனைவரும் இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு நிறைய ஆப்ஷன்கள் இருக்கிறது”
இதையும் படிங்க : நீங்க நினைச்சு பார்க்காத இந்திய பிளேயிங் XI இருக்கு.. கம்பீர் அதை இறக்கவிட போறாரு – கவாஸ்கர் பேச்சு
“இந்த இலங்கை அணியை எடுத்துக் கொண்டால் சூப்பர் ஸ்டார்கள் இருக்கும் அணி கிடையாது. ஆனால் இந்த அணியில் விளையாடக்கூடியவர்கள் சூப்பர் ஸ்டார்கள் ஆக மாறக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்களிடம் நல்ல எதிர்காலத்திற்கான அணி இருக்கிறது. எனவே இலங்கை அணி ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இடம் பெறும்” என்று கூறி இருக்கிறார்.






