பெண்கள் ஐபிஎல்.. 2 ஓவருக்கு 16 ரன்.. சர்ப்ரைஸ் செய்த ஆர்சிபி.. எதிர்பார்க்காத திருப்பம்

0
753
RCBW

தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் இரண்டாவது சீசனாக பெண்களுக்கான பிரான்சிசைஸ் டி20 லீக் டபிள்யூபிஎல் தொடரை நேற்று தொடங்கி நடத்தி வருகிறது.

நேற்று நடைபெற்ற துவக்க போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி அணியை கடைசிப் பந்தில் சிக்சர் அடித்து வீழ்த்தி அசத்தியது.

- Advertisement -

இன்று பெங்களூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் உபி வாரியர்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியும் மிகவும் விறுவிறுப்பானதாக அமைந்தது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற உபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆர்சிபி அணியின் துவக்க வீராங்கனைகள் சோபி டிவைன் 1, ஸ்மிருதி மந்தனா 13 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். அடுத்து ஆஸ்திரேலியா நட்சத்திரம் எலிஸ் பெரி 8 ரன்களில் ஆட்டம் இழக்க ஆர்சிபி அணிக்கு பெரிய நெருக்கடி உருவானது.

இந்த நேரத்தில் இந்திய வீராங்கனைகள் மேக்னா மற்றும் ரிச்சா கோஸ் இருவரும் இணைந்து அதிரடியில் மிரட்டினார்கள். மேக்னா 53(44), ரிச்சா கோஸ் 62(37) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. உபி தரப்பில் ராஜேஸ்வரி இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இலக்கை நோக்கி விளையாடிய உபி வாரியர்ஸ் அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி 5, தினேஷ் விரிந்தா 18, தகிலா மெக்ராத் 22, கிரேஸ் ஹாரிஸ் 38, ஸ்வேதா 31 ரன்கள் எடுத்தார்கள்.

இந்த நிலையில் கடைசி இரண்டு ஓவர்களுக்கு உபி வாரியர்ஸ் அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை வீசிய ஜார்ஜியா வார்கம் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

இதற்கடுத்து கடைசி ஓவரை வீசிய சோபி எட்டு ரன்கள் மட்டுமே விட்டுத் தர, பரபரப்பான போட்டியில் ஆர்சிபி அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பெற்றது. ஆர் சி பி தரப்பில் சோபனா ஆசா நான்கு ஓவர்கள் பந்துவீசி 22 ரன்கள் மட்டும் விட்டுத் தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

கடந்த முதல் சீசனில் ஆர்சிபி அணி தொடர்ச்சியாக படுதோல்விகளை சந்தித்து வந்தது. சிறந்த வீராங்கனைகள் இருந்தும் அந்த அணி முதல் வெற்றிக்காக மிகவும் போராட வேண்டியதாக இருந்தது. ஆனால் இந்த முறை எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக முதல் போட்டியிலேயே வென்று இருக்கிறது.