கோலி காட்டிய வித்தை.. டாப் கிளாஸ் என பாராட்டிய தினேஷ் கார்த்திக்.. இது தான் காரணம் என கருத்து

0
475

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தன்னுடைய ஃபார்ம்க்கு திரும்பிய சமிக்கைகளை களத்தில் காட்டினார். விராட் கோலி டி 20, ஒரு நாள் போட்டிகளில் ஃபார்ம்க்கு திரும்பினாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டி ஒன்றில் 70 ரன்களுக்கு மேல் அடித்த விராட் கோலி 3 ஆண்டுகளாக சிவப்பு நிற பந்தில் சதம் அடிக்கவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெல்லி டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 44 ரன்கள் சேர்த்தார். ஆனால் நடுவரின் தவறான முடிவால் விராட் கோலி தனது விக்கெட்டை இழந்தார். இந்த நிலையில் விராட் கோலியின் ஆட்டத்தை தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். அதில் கிரிக்கெட் ரசிகர்கள் பல சமயம் வீரர்கள் எத்தனை ரன்கள் அடித்தார் என்றுதான் பார்ப்பார்கள். ஆனால் அவர் எப்படி விளையாடினார் என்பதை கவனிக்க மாட்டார்கள்.

வீரர்களுக்கு சில இன்னிங்ஸ் ஆடுவதன் மூலம் அவர்களுடைய நம்பிக்கை மீண்டும் அவர்களுக்கு கிடைக்கும். அப்படி ஒரு இன்னிங்ஸ் தான் விராட் கோலி டெல்லி டெஸ்டில் விளையாடினார். லயானுக்கு எதிராக இந்திய வீரர்கள் தடுமாறினர். ஆனால் விராட் கோலி மட்டும் அவரை சுலபமாக எதிர்கொண்டார். ராகுல், புஜாரா, ரோகித் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் கோலி லயானை எதிர்கொள்ளும் போது களத்தில் பெரிதாக ஏதும் நடக்கவில்லை என்பது போன்ற தோற்றத்தை கொடுத்தார். அதுதான் கோலியின் சிறப்பாகும்.

லயானை அவர் எதிர்கொண்ட விதம் என்னை மிகவும் கவர்ந்தது. லயான் பந்துவீச்சை கோலி விளையாடும் போது தன்னுடைய ஆப் ஸ்டெம்பை மறைத்துக் கொண்டார். பந்துவீச்சாளர் எப்போதுமே ஆப் ஸ்டம்ப் தெரிய வேண்டும் என நினைப்பார். அதனை வீரர்கள் மறைத்துக் கொண்டால் அது பந்துவீச்சாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் .பந்துவீச்சாளர்கள் ஆஃப் ஸ்டம்ப் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் பந்தை சரியான நேர்கோட்டில் வீசமாட்டார்கள். இதன் மூலம் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க வாய்ப்பாக இருக்கும்.

- Advertisement -

நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி கூட ஆப் ஸ்டம்பை மறைத்துக் கொண்டு பந்தை லெக் சைடில் விளையாடினார். நாதன் லயானை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற யுத்தியை விராட் கோலி சிறப்பாக தெரிந்து கொண்டு கையாண்டார் என்று தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் விராட் கோலி அதில் ஒரு சதமாவது அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.