ஷாரூகானின் வெற்றியை கொண்டாடும் தினேஷ் கார்த்திக் மற்றும் தமிழக வீரர்கள்

0
352
Shahrukh Khan IPL 2021

14வது சீசனுக்கான ஐ.பி.எல் தொடர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த வருடத்திற்கான ஏலத்தில் 1098 வீரர்கள் தங்களது பெயரை 2021 காண ஐபிஎல் போட்டிக்கு பதிவு செய்தனர் ஆனால் அதிலிருந்து 298 வீரர்களுக்கு மட்டுமே இந்த ஏலத்தில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஸ்தாக் அலி தொடரில் சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடிய தமிழகத்தை சார்ந்த ஹாருக்கானை ஏலத்தில் எடுக்க பல அணிகள் போட்டிபோட்டுக்கொண்டு இருந்த நிலையில் 5.25 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஷாருக்கானை தட்டிச்சென்றது.

தற்போது விஜய் ஹசாரே தொடருக்கான தமிழக அணியில் இடம்பெற்றிருக்கும் ஷாருக்கான் வலை பயிற்சி முடித்து விட்டு பேருந்தில் செல்லும் போது தன்னை ஏலம் எடுப்பதை போனில் பார்த்துகொண்டிருந்தார். பஞ்சாப் அணி அவரை ஏலத்தில் எடுத்ததும் தமிழக அனைவரும் கூச்சலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஷாருக்கானை ஏலத்தில் எடுத்த தருணத்தையும், அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சக வீரர்களின் தருணத்தையும் தினேஷ் கார்த்திக் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். தற்போது அந்த இணையத்தில் வேகமாக பரவி வருகிறது

- Advertisement -