இந்தியத் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் சர்பராஸ் கானை செலக்ட் செய்யாதது அவமானமானது என திலீப் வெங்சர்கார் விமர்சனம்.
தற்போது சர்பராஸ் கான் உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக வெள்ளை பந்து தொடர்களில் மிகச் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்து வருகிறார். மேலும் அவருடைய அடிப்படை விலையான 75 லட்சம் ரூபாய்க்கு சிஎஸ்கே இந்த முறை வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
குழப்பமாக இருக்கிறது
முதன் முதலில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிறகு நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் தனது முதல் சதத்தை அடித்தார். இதற்கு அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இடம் கிடைத்தாலும் அவருக்கு விளையாடும் வாய்ப்பை கொடுக்கவில்லை. ஆனால் அத்தோடு அவரை இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை.
இதுகுறித்து திலீப் வெங்சர்கார் கூறும் பொழுது “எனக்கு சர்ப்ராஸ் கானை இந்திய கிரிக்கெட்டில் எந்த வடிவத்திலும் தேர்வு செய்யவில்லை என்பது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால் அவர் தற்போது இவ்வளவு சிறப்பாக விளையாடி வருகிறார். இருந்தும் ஏன் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை” என்பது புரியவில்லை”
இது அவமானம்
“அவர் முதன் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தரம்சாலா போட்டியில் படிக்கல் உடன் இணைந்து ஒரு அழகான பார்ட்னர்ஷிப் உருவாக்கியிருப்பார். குறிப்பாக அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அவருடைய இந்த பார்ட்னர்ஷிப் முக்கிய காரணமாக இருந்தது”
இதையும் படிங்க : டி20 உலக கோப்பை.. ஆப்கான் அணி அறிவிப்பு.. நால் முனை வியூகம்.. அரையிறுதி வாய்ப்பு உண்டா? – முழு விபரங்கள்
“இதற்குப் பிறகு அவர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இருந்தார். ஆனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அவருக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கவில்லை. இதற்குப் பிறகு அவரை இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை. அவர் அனைத்து வடிவத்திலும் விளையாடுவதற்கான சிறந்த திறன்களை பெற்றிருக்கிறார். அவரைத் தேர்வு செய்யாதது அவமானம்” என்று கூறியிருக்கிறார்.






