டி20 உலக கோப்பை.. ஆப்கான் அணி அறிவிப்பு.. நால் முனை வியூகம்.. அரையிறுதி வாய்ப்பு உண்டா? – முழு விபரங்கள்

0
74
Afghanistan

2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கு ரஷீத் கான் தலைமையில் 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிகளை வீழ்த்தி அரை இறுதிக்கு முதல் முறையாக தகுதி பெற்று இருந்தது.

- Advertisement -

நால் முனை தாக்குதல்

தற்போதைய டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக சுழல் பந்துவீச்சுக்கு சாதகங்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டு எல்லா அணைகளுமே சுழல் பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியில் இயல்பாகவே சிறந்த சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அணியில் ரஷீத் கான், முகமது நபி, முஜீப் ரஹ்மான் மற்றும் நூர் அகமத் என உலக தரம் வாய்ந்த நான்கு வெள்ளைப் பந்து சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். இதில் மூன்று பேர் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அரை இறுதி வாய்ப்பு உண்டா?

தற்போதைக்கு ஆப்கானிஸ்தான் அணியின் பவுலிங் யூனிட் வலிமையாகவே காணப்படுகிறது. ஆனால் பேட்டிங் யூனிட்டில் மேல் வரிசை சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஆப்கானிஸ்தான் வெல்லக்கூடிய அணியாக இருந்திருக்கிறது. மிடில் ஆர்டர் அவர்களுக்கு பலவீனமாக இருப்பது இந்த முறையும் தொடர்கிறது. சுழல் பந்துவீச்சு சாதகமான ஆடுகளங்கள் தொடர்ந்து கிடைத்தால் அரை இறுதிக்கு தகுதி பெற முடியும்.

இதையும் படிங்க : 75 பந்து 157 ரன்.. சர்ப்ராஸ் கானுக்கு சிஎஸ்கே ஆட வாய்ப்பு தரணும்.. முக்கிய காரணம் இதுதான் – அஸ்வின் கோரிக்கை

ஆப்கானிஸ்தான் அணி: ரஷீத் கான் (கேப்டன்), இப்ராஹிம் சத்ரான் (விசி), ரஹ்மானுல்லா குர்பாஸ், முகமது இஷாக், செடிகுல்லா அடல், தர்வீஷ் ரசூலி, ஷாஹிதுல்லா கமால், அஸ்மத்துல்லா உமர்சாய், குல்பாடின் நைப், முகமது நபி, நூர் அஹ்மத், முஜீப் ரஹமான், ஃபாரூக்கி மற்றும் அப்துல்லா அஹ்மத்ஸாய்.

ரிசர்வ் வீரர்கள்: அல்லாஹ் கசன்ஃபர், இஜாஸ் அஹ்மத்சாய் மற்றும் ஜியா உர் ரஹ்மான் ஷரிஃபி.

- Advertisement -