ஹாரிஸ் ரவூப் உடன் உம்ரான் மாலிக்கை ஒப்பிடுவது, விராட் கோலியை மற்றவருடன் ஒப்படிவது போல – பாகிஸ்தான் முன்னாள் வீரர் பேட்டி!

0
1384

ஹாரிஸ் ரவூப் உடன் உம்ரான் மாலிக்கை ஒப்பிடுவது, விராட் கோலியை மற்றவருடன் ஒப்படிவது போல என்று முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் ஜவத் பேசியுள்ளார்.

இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக், ஐபிஎல் போட்டிகளில் தனது அதிவேகமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் காரணமாக தேர்வுக்குழுவினரின் கவனத்தை ஈர்த்ததார். இந்திய அணிக்கும் தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இடம்பெற்று விளையாடி வரும் உம்ரான் மாலிக், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுடனான தொடரில் இடம்பெற்று அபாரமாக பந்துவீசினார். இலங்கை ஒருநாள் தொடரின்போது 156 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி அதிவேகமாக வந்து வீசிய இந்திய வீரர் என்கிற சாதனையை படைத்தார்.

தனது வேகத்தின் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் உம்ரான் மாலிக், பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவூப் உடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறார். ஏனெனில் ஹாரிஸ் ரவூப் 150+ கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசக்கூடிய வீரர் ஆவார்.

இந்நிலையில் உம்ரான் மாலிக், ஹாரிஸ் ரவூப் உடன் ஒப்பிடுவது சரியானது அல்ல, அது விராட் கோலியை மற்ற வீரர்களுடன் ஒப்பிடுவது போல என்று பேசி இருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆகிப் ஜவத். அவர் பேசியதாவது:

- Advertisement -

உம்ரான் மாலிக் முதல் இரண்டு ஓவர்களில் தொடர்ச்சியாக 150+ கிலோமீட்டர் வேகத்தில் வீசி வருகிறார். ஒருநாள் போட்டிகளில் ஏழாவது அல்லது எட்டாவது ஓவரின்போது, அவரது வேகம் கணிசமாக குறைந்து விடுகிறது. 138-140 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறார்.

ஆனால் ஹாரிஸ் ரவூப் அப்படி அல்ல. முதல் ஓவரில் இருந்து போட்டியின் கடைசி ஓவர் வரை சீரான வேகத்தில் பந்து வீசுகிறார். இப்படி இருக்கும் பொழுது எந்த வகையில் இருவரையும் ஒப்பிட்டு பேசுகிறீர்கள். இந்த ஒப்பீடு என்னை பொருத்தவரை, விராட் கோலியை மற்ற வீரர்களுடன் ஒப்பிடுவது போல. அவரது உடல் தகுதி மற்றும் ரன் குவிக்கும் விதம் மற்று வீரர்களை விட மிகவும் சிறந்ததாக இருக்கும் அல்லவா.” என்றார்.

- Advertisement -

உம்ரான் மாலிக் இதுவரை ஏழு ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி20 போட்டிகள் விளையாடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஹாரிஸ் ரவூப் ஒரு டெஸ்ட் போட்டி, 57 டி20 போட்டி மற்றும் 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.