வித்தியாசமான செலக்சன்… ஜோஸ் பட்லர் ODI கனவு அணியின் 5 வீரர்கள்.. இந்திய வீரர் ஒருவருக்கு இடம்!

0
13278
Buttler

நடக்க இருக்கின்ற உலகக் கோப்பையில், சிக்ஸர் அடிக்கக் கூடிய திறனில் 11 வீரர்களையும் களம் இறக்கக்கூடிய அணியாக இங்கிலாந்து மட்டுமே இருக்கிறது!

இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் சாம் கரன் வருகிறார். இதற்கடுத்து ஆல்ரவுண்டர் வோக்ஸ், ஆதில் ரஷீத், மார்க் வுட் ஆகியோர் வருகிறார்கள். இவர்கள் எல்லோருமே பேட்டிங் செய்யக் கூடியவர்கள். இவர்களால் பெரிய ஷாட்கள் விளையாட முடியும்.

- Advertisement -

இந்தக் காரணத்தினால் இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பையில் மிக வலிமையான அணியாக பெரும்பாலான முன்னாள் வீரர்களால் கிரிக்கெட் விமர்சகர்களால் கணிக்கப்பட்டிருக்கிறது.

தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 என இரண்டிலும் நடப்பு சாம்பியன் ஆக இருந்து வருவது இங்கிலாந்து அணிதான். இங்கிலாந்து அணியில் இந்த புதிய எழுச்சி ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட் வரை சுவாரசியமாக்கி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

- Advertisement -

2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் மிக மோசமாக வெளியேறி வந்தது, இங்கிலாந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது. இதன் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட்டின் அணுகுமுறை தாக்குதல் பாணிக்கு மாறியது. அங்கிருந்து இப்போது வரை, இங்கிலாந்து பேட்டிங் பவுலிங் என இரண்டு துறைகளிலும் அதிரடியான அணுகுமுறையையே கொண்டிருக்கிறது.

தற்பொழுது இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு ஜோஸ் பட்லர் தலைமை தாங்குகிறார். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் உலகின் அபாயகரமான வீரர்களில் இவருக்கு முதன்மையான இடம் தற்காலத்தில் உண்டு.

இவர் தன்னுடைய ஒருநாள் கிரிக்கெட் கனவு அணிக்கு ஐந்து வீரர்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார். அதில் முதல் வீரராக இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை தேர்ந்தெடுத்து இருக்கிறார். இரண்டாவது வீரராக தென்னாப்பிரிக்காவின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குயிண்டன் டி காக், மற்றும் மூன்று வீரர்களாக மேக்ஸ்வெல், ஆதில் ரசீத், அண்ட்ரிச் நோர்க்கியா ஆகிய வீரர்கள் இருக்கிறார்கள்!

- Advertisement -