ஏமாத்தி ஜெயிச்சதா தென் ஆப்பிரிக்கா?.. அம்பயரை திட்டி தீர்த்த டிராவிட்.. மைதானத்தில் பரபரப்பு.. என்ன காரணம்?

0
1281
Dravid

இன்று இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டி மழையால் நடைபெறாத காரணத்தினால், தற்பொழுது தென் ஆப்பிரிக்க அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

தென் ஆப்பிரிக்க அணி டாசில் வெற்றி பெற, இந்திய அணி பேட்டிங் செய்ய வந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் சூரியகுமார் மற்றும் ரிங்கு சிங் இருவரும் அதிரடியாக அரை சதம் அடித்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் ஆட்டத்தில் மூன்று பந்துகள் எஞ்சி இருந்த போது மழை வந்தது. மேற்கொண்டு மழை நீண்ட நேரம் பெய்த காரணத்தினால், அடுத்து இந்திய அணி விளையாடாமல், 15 ஓவர்களாக இரண்டாம் பகுதி ஆட்டத்திற்கு குறைக்கப்பட்டு, தென் ஆப்பிரிக்காவுக்கு 152 ரன்கள் இலக்கு கொடுக்கப்பட்டது.

இந்த இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரீசா ஹென்றிக்ஸ் 27 பந்தில் 49 ரன்கள், மார்க்ரம் 17 பந்தில் 30 ரன்கள் எடுக்க அந்த அணி 14 ஓவரில் ஐந்து விக்கெட் இழந்து, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டி நடைபெற்ற மைதானத்தில் மழை நீர் சரியான முறையில் வடியவே இல்லை. மைதானத்தின் மேற்பரப்பு பார்ப்பதற்கு சரியாக இருப்பது போல் தெரிந்தாலும். கொஞ்சம் கீழே தண்ணீர் தேங்கி இருந்தது.

- Advertisement -

வீரர்கள் பந்தை தடுக்க டைவ் செய்த பொழுது, தண்ணீர் உள்ளிருந்து வெளியில் தெளித்தது. தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய முதல் பந்தின் போது, முகேஷ் குமார் அதை தடுக்க முற்பட்ட பொழுது இப்படி நடந்தது.

இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்யும்பொழுது ட்ரிங்க்ஸ் டைம் நேரத்தில் உள்ளே வந்த ராகுல் டிராவிட், களத்தில் இருந்த நடுவர்கள் மற்றும் நான்காவது நடுவரிடம் கடுமையாக இது குறித்து முறையிட்டார். அவர்கள் அவரிடம் ஏதோ சமாதானம் சொன்னார்கள்.

இதில் திருப்தி அடையாத ராகுல் டிராவிட் நடுவருடன் காரசாரமாக பேசிக்கொண்டு, தரையில் அவரது கையை வைத்து தேய்த்து, எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்பதை காண்பித்து விட்டு, மிகக் கோபமாக அங்கிருந்து வெளியேறி சென்றார். எப்பொழுதும் ராகுல் டிராவிட் இப்படி நடந்து பார்க்க முடியாது.

தண்ணீர் வடிவதற்கான வசதி மைதானத்தில் சரியாக இல்லாத பொழுது, வீரர்கள் விளையாடுவதற்கு சரியான முறையில் மைதானம் இருந்தால் மட்டுமே விளையாட அனுமதிக்க வேண்டும். மேலும் பந்து சீக்கிரத்தில் ஊறிப் போன காரணத்தால் இந்திய அணி தோல்வியும் அடைந்தது. இந்த இடத்தில் கள நடுவர்கள் ஒருதலைப் பட்சமாக செயல்பட்டதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்!